Wednesday, May 14, 2014

டிப்ளமோ தகுதிக்கு ஜூனியர் பொறியாளர் பணி

சிக்கிம் அரசின் சாலைகள் & பாலங்கள் துறைகளில் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ள ஜூனியர் பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை சிக்கிம் அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்க்கப்படுகின்றன.

பணி: ஜூனியர் பொறியாளர் (Mechanical)

காலியிடங்களின் எண்ணிக்கை: 08

வயது வரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்: மாதம் ரூ 9300-34800 + தர ஊதியம் ரூ.3800

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. இதனை State Bank of Sikkim வங்கியில் கணக்கு எண் 0051-SPSC -ல் ரொக்கமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://spscskm.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள  விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Secretary, Sikkim Public Service Commission,

Old West Point School complex,

Near Police Headquarter, Gangtok

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.06.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://spscskm.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment