Friday, May 16, 2014

+2 முடித்தவர்களுக்கு விமான பைலட் பயிற்சி

மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் கீழ் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் செயல்பட்டு வரும் இந்திராகாந்தி ராஷ்ட்டிரிய யுரான் அகாடமியில் சேர பைலட் பயிற்சியில் சேர 17 வயது பூர்த்தியான பிளஸ் 2 முடித்தவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த இடங்கள்: 150 இதில் பொதுபிரிவினருக்கு - 75 இடங்களும், எஸ்சி பிரிவினருக்கு - 23 இடங்களும், எஸ்டி பிரிவினருக்கு - 11 இடங்களும். ஒபிசி பிரிவனருக்கு - 41 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
வயதுவரம்பு: 17 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சி கட்டணம்: மொத்தம் ரூ.32 லட்சத்து 50 ஆயிரம். இததை 4 தவணைகளில் செலுத்தலாம். (3 மாதங்களுக்கு ஒரு முறை செலுத்த வேண்டும்).
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைனில் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, பைலட் தகுதித்தேர்வு அல்லது சைக்கோ மெட்ரிக் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில்  தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பபடுவார்கள். இருபாலாருக்கும் தனி தனியான விடுதி வசதி உண்டு.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஒபிசி பிரிவினருக்கு ரூ.6.000. (எஸ்சி., எஸ்டியினருக்கு பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை)  கட்டணத்தை ஏதேனும் ஒரு பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் ரொக்கமாக செலுத்தலாம் அல்லது நெட் பேங்கிங் மூலமோ, கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலமோ செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.igrua.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 01.06.2014.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.05.2014.
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு www.igrua.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment