Tuesday, April 29, 2014

ரயில் நில மேம்பாட்டு ஆணையத்தில் பல்வேறு பணி

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரயில் நில மேம்பாட்டு ஆணையத்தில் (RLDA) காலியாக உள்ள GM/Projects, JGM/Civil, Manager, Accounts Assistant, Hindi Translator போன்ற 23 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
01. GM/Projects - 01
சம்பளம்: மாதம் ரூ.37400 - 67000 + தர ஊதியம் ரூ.10000
02 JGM/ சிவில் - 04
சம்பளம்: மாதம் ரூ.37400 - 67000 + தர ஊதியம் ரூ.10000
03. JGM/REUP - 01
சம்பளம்: மாதம் ரூ. 37400 - 67000 + தர ஊதியம் ரூ.10000
04. JGM/Finance & Accounts - 01
சம்பளம்: மாதம் ரூ. 37400 - 67000 + தர ஊதியம் ரூ.10000
05. Manager/HR - 01
சம்பளம் : Rs.15600 - 39100 + தர ஊதியம் ரூ.6600
06. Manager/REUP - 01
சம்பளம் : Rs.15600 - 39100 + தர ஊதியம் ரூ.6600
07. Manager/ Project - 02
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் ரூ.6600
08  Manager/ vigilance - 01
சம்பளம்: மாதம் ரூ. 15600 - 39100 + தர ஊதியம் ரூ.6600
09 Accounts Assistant - 03
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4800
10. Office Assistant/HR - 01
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4600
11. Office Assistant Project - 01
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4600
12. Private Secretary - 03
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4600
13. Hindi Translator - 01
சம்பளம்: மாதம் ரூ..9300 - 34800 + தர ஊதியம் ரூ.4600.
14. Draughsman - 02
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4200.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ் நகல்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Joint General Manager (HRD),
Rail Land Development Authority, 
Near Safdarjung Railway Station,
Moti Bagh-I, New Delhi-110021
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 26.05.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தகுதிகள், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.rlda.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பாதுகாப்பு அதிகாரி பணி

புதுதில்லியில் செயல்பட்டு வரும் பஞ்சாப் நேஷநல் வங்கியில் காலியாக உள்ள Chief Security Officer பணிக்கு தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Chief Security Officer (CSO)
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்திய ராணுவத்தில் Colonel தகுதிக்குரிய பணியிலிருந்து ஒய்வு பெற்றிருக்க வேண்டும் அல்லது முப்படைகள் ஏதாவதொன்றில் Colonel பணிக்கு இணையக பணியாற்றி ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 36.200 - 40,400
வயதுவம்பு: 01.01.2014 தேதியின்படி 55-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் விண்ணப்பதாரரின் பணி அனுபவம், மருத்துவ தகுதி, கணினி இயக்கும் திறமைக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. கட்டணத்தை Punjab National Bank, CSO, New Delhi என்ற முகவரிக்கு டி.டி.யாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.pnbindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 03.05.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  THE GENERAL MANAGER-HRD, Punjab National Bank, HO: HRDD, 7-BHIKHAIJI CAMA PLACE, NEW DELHI - 110066.

பட்டதாரிகளுக்கு டெரிட்டோரியல் ராணுவத்தில் அதிகாரி பணி

இந்திய ராணுவத்தின்கீழ் செயல்படும் டெரிட்டோரியல் ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்ற தகுதியான ஆண் குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Officer
வயதுவரம்பு: 30.06.2014 தேதியின்படி 18 முதல் 42க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசு சார்ந்த, தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், சுய தொழில் செய்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Armed Forces/Police/Para Military Force-ல் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் அல்ல.
சம்பளம்: ரூ.15,800 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 10.08.2014
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: பெங்களூரு.
நேர்முகத் தேர்வுக்கு வருபவர்கள் கீழ்க்கண்ட ஆவணங்களின் உண்மை நகல் மற்றும் கெஜட்டெட் அதிகாரியால் அட்டெஸ்ட் செய்யப்பட்ட நகல்களை கொண்டு வர வேண்டும்.
பதிவுபெற்ற மருத்துவரிடமிருந்து பெற்ற Fitness சான்றிதழ்.
புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை(வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு)
மத்திய, மாநில அரசு பணியிலிருப்பவர்கள் சர்வீஸ் சான்றிதழை கொண்டு வர வேண்டும். (தலைமை அலுவலகத்தில் இருந்து பெற்றதாக இருக்க வேண்டும்).
சுயதொழில் புரிபவர்கள் Non-Judicial Stamp Paper-ல் Affidavit சான்றிதழில் வருட வருமானத்தை குறிப்பிட்டிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.indianarmy.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:30.06.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Commander,
TA Group Head Quarters, Southern Command, Pune - 411001.
Ph.No: 020-26102848

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் லேப்டெக்னீசியன் பணி

கர்நாடக மாநிலம் பெங்களூரில் செயல்பட்டு வரும் காசநோய் ஆராய்ச்சி மையத்தில் லேப்டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Lab Technicians.
காலியிடம்: 06
சம்பளம்: ரூ.25,000
கல்வித்தகுதி: Microbiology/Medical Laboratory Technology பாடங்களில் M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும். M.Sc Medical Lab Technology பட்டம் பெற்றவர்கள் DMLT முடித்து 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Laboratory Technicians
காலியிடம்: 02
சம்பளம்: ரூ.18,000
கல்வித்தகுதி: Microbiology பாடத்தில்
B.Sc பட்டம் அல்லது B.Sc Medical Lab Technology படிப்புடன் DMLT படித்திருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Accountant
காலியிடம்: 01
சம்பளம்: மாதம் ரூ.20,000
கல்வித்தகுதி: M.com பட்டப்படிப்புடன் Tally படித்திருக்க வேண்டும். CA பதிவு பெற்றவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.
பணி: Data Analyst
காலியிடம்: 01
சம்பளம்: மாதம் ரூ.20,000
கல்வித்தகுதி: கணினி அறிவியல், கணிதம், புள்ளியியல் துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். M.S.Office படிப்புடன் கம்ப்யூட்டரில் பணிபுரிய தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ntiinia.kar.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
THE DiRECTOR,
NATIONAL TUBERCULOSIS IMSTITUTE, No.8, BELLARY ROAD, BANGALORE - 560003.
E-mailnti@ntiindia.org.in
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.04.2014

Friday, April 25, 2014

Axis Bank Recruitment 2014

Post: Assistant Manager

Age: 21-30 years

Qualification: 12th Passed / Diploma / Graduate

To Apply Online, click this Link ▬► http://bit.ly/1ph1vZD

Note => Don't Forget To Share With Everyone
Indian Ordnance Factory Recruitment 2014

Vacancies: 267 posts

Brought to you by: Indian Ordnance Factory

Last Date for the receipt of Applications: - 15th of May, 2014

For Details, click this link ▬►http://bit.ly/1lFlhIx

Please Share this Vacancy with Everyone
JKPSC KAS Exam 2014 Notification Out

No. of Vacancies: 51 posts

Sale of Application forms from : 12th May, 2014
Last date for Receipt of Applications forms: 12th June, 2014

Qualifications: Graduation Only

Plz Share this News with Everyone

For Complete Details, click this link▬► http://bit.ly/1l7xRSy
SBI PO Exam 2014 -->> Today is the Last Day to Apply for 1800 PO Jobs in SBI 

Vacancies: 1837 Posts

Salary : Rs 70,000 (Approx.) Per Month

Age : Min : 21 years and Max: 30 Years

Last Date to Apply : 25th April, 2014

For Full Details, Click this Link ▬► http://bit.ly/1shpAyx

Please Share this Vacancy With Everyone.

Thursday, April 24, 2014

பள்ளி மாணவர்களுக்கு கோடை காலப் பயிற்சிகள்

கோடை விடுமுறையை பயனுள்ளதாகக் கழிக்க பள்ளி மாணவர்களுக்காக சென்னையில் நடைபெறும் கோடை காலப் பயிற்சிகள் குறித்த சிறிய அறிமுகம்...

பொதுத் தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியிருக்கும் நேரம் இது. இந்தக் கோடை விடுமுறையை பயனுள்ளதாகக் கழிக்கும் வகையில், ஏராளமான கோடைகாலப் பயிற்சி முகாம்கள் சென்னை நகரெங்கும் நடைபெறுகின்றன. பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் இக்காலத்தில், குழந்தைகளை தனியே வீட்டில் விட்டுவிட்டுச் செல்வதைவிட, இதுபோன்ற கோடைகாலப் பயிற்சி முகாம்களில் சேர்த்துவிடுவதே நல்லது என்று கருதுகிறார்கள். இந்த முகாம்களின் மூலம் புதிய விஷயங்களை குழந்தைகள் கற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், பள்ளிப் பாடங்களிலிருந்து விடுபட்டு, வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை அறிவையும் பெற முடிகிறது. இனி, பள்ளி மாணவர்களுக்கான கோடை காலப் பயிற்சிகள் பற்றிய தகவல்கள்...

இயற்கைப் பயண முகாம்
கர்ப்புற நெருக்கடியிலிருந்து சற்றே விலகி, இந்தக் கோடையை உல்லாசமாகக் கொண்டாட விரும்புபவர்களுக்கென்றே சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த இம்ப்ரஸ்ஸாரியோ டிராவல்ஸ் நிறுவனம் மாணவர்களுக்கான கோடை கால முகாமை நடத்துகிறது. ‘நேச்சர் கேம்ப்’ எனப்படும் இந்த முகாமில் பங்கேற்கும் மாணவர்களை இயற்கையான வனப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்கிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான இயற்கைச் சுற்றுலாக்கள், கல்விச் சுற்றுலாக்களை ஏற்படுத்தித் தரும் பணியை நாங்கள் பல்லாண்டுகளாகச் செய்து வருகிறோம். 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இந்த இயற்கைச் சுற்றுலாவில் பங்கேற்கலாம். பள்ளி மாணவர்களிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கொடைக்கானல் அருகே வனப்பகுதிக்கு இயற்கைச் சுற்றுலா அழைத்துச் செல்கிறோம். வழக்கமான சுற்றுலாவைப் போல அல்லாமல், வனங்களிலேயே தங்கியிருந்து, கானுயிர்களை ரசித்தல், மலையேற்றப் பயிற்சி என்று முற்றிலும் இயற்கையோடு இணைந்த சுற்றுலாவாக இது வடிவமைக்கப்பட்டள்ளது.

3 இரவுகள், 4 பகல் என்று நான்கு நாட்கள் இந்தச் சுற்றுலா இருக்கும். வனத்திலேயே டெண்ட் அடித்துத் தங்குவோம். அதிகாலையிலிருந்து மதியம் வரை மலையேற்றம் போன்ற பயிற்சிகளும், மதியத்துக்கு மேல் விளையாட்டு, தகவல் பரிமாற்றம், தலைமைப் பண்புப் பயிற்சி போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படும். ஒரு முகாமுக்கு 30 மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். எங்களுடன் பயிற்சி பெற்ற ஆசிரியர்களும், நிபுணர்களும் பயணிக்கிறார்கள். தமிழகம் முழுவதிலுமிருந்து வரும் மாணவர்கள் திண்டுக்கல்லில் ஒன்று சேர்கிறார்கள். அங்கிருந்து நேச்சர் கேம்ப் தொடங்குகிறது. பலதரப்பட்ட மாணவர்களும் ஒன்றாகத் தங்கியிருந்து, கலந்து பழகி, விட்டுக்கொடுத்து, இணக்கமாக வாழும் நெறியைக் கற்றுக்கொள்கிறார்கள். மாணவர்கள், மாணவிகளுக்கு தனித் தனி தங்கும் வசதியும், ஆண், பெண் ஆசிரியர்களும் உள்ளனர். சுவையான சைவ உணவு (பஃபே முறைப்படி) வழங்கப்படும். இந்த முகாமுக்கான கட்டணம் நபர் ஒருவருக்கு ரூ.5,500" என்று உற்சாகமாக விவரிக்கிறார் முகாம் ஏற்பாட்டாளர் மீனாட்சி சுந்தரம்.
விவரங்களுக்கு: 94440 03440

மென்டல் மேத்ஸ், ஸ்டோரி டெல்லிங்
3 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக மனக் கணக்குப் பயிற்சி, கதை சொல்லுதல், வாசிப்பு, எழுத்துப் பயிற்சிகளை அளிக்கிறது ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த ஆனந்த் கிரியேட்டிவ் மைண்ட் அமைப்பு. எம்.பி. ஆனந்த் மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெறும் இந்த பயிற்சி, மூன்று வாரங்களுக்கானது. நமது வசதிக்கேற்றபடி காலையிலோ அல்லது மதியமோ கலந்து கொள்ளலாம். மே 30-ஆம் தேதி வரை மூன்று பகுதிகளாகப் பயிற்சியளிக்கிறோம். மூன்று முதல் ஏழு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எழுத்துப் பயிற்சி, வாசிப்புப் பயிற்சி, கதை சொல்லுதல், மனக் கணக்கு, அடிப்படை அறிவியலை விளையாட்டுப் போல கற்பித்தல், களிமண்ணால் கலைப் பொருட்கள் செய்தல், இசை போன்றவற்றை கற்றுக்கொடுக்கிறோம். எட்டு முதல் பதினான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தஞ்சாவூர் ஓவியம், மேடைப் பேச்சு, தலைமைப் பண்புப் பயிற்சி, ஹிந்தி மற்றும் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, வீணை இசைப் பயிற்சி போன்ற பல்வேறு பயிற்சிகளை அளிக்கிறோம். பயிற்சிக் கட்டணம் ரூ.3,000. இதில் ஓவியம் போன்ற பயிற்சிகளுக்கான உபகரணங்களும் அடங்கும். குழுவாக நிறையப் பேர் வந்து சேர்ந்தால் கட்டணத் தொகையில் 10 முதல் 15 சதவீதம் வரை தள்ளுபடியும் உள்ளது. பள்ளிகள் திறந்தபிறகும் மாணவர்கள் விரும்பினால் இந்தப் பயிற்சி வகுப்புகளில் தொடர்ந்து பயிற்சி பெறலாம்" என்கிறார் இந்த மையத்தின் முதல்வர் அமுதா ஆனந்த்.
விவரங்களுக்கு: 9840479745, 9840240233

கிரிக்கெட் பயிற்சி
கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு முறைப்படி கிரிக்கெட் பயிற்சி அளித்து வருகிறது விருகம்பாக்கத்திலுள்ள ஏவிஎம் கிரிக்கெட் அகாதெமி. வார நாட்களில் தினசரி பயிற்சி நடந்தாலும்கூட, கோடை விடுமுறை பயிற்சி வகுப்பில்தான் நிறைய மாணவர்கள் பயிற்சிக்கு சேர்கிறார்கள். எங்கள் அகாதெமியிலிருந்து 1500-க்கும் மேற்பட்ட இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கியிருக்கிறோம். 14-15 வயதுக்குட்பட்ட மாணவர்கள் இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம். ஏப்ரல், மே மாதம் நடைபெறும் கோடை காலப் பயிற்சி வகுப்பில் கிரிக்கெட் விளையாட்டின் நுணுக்கங்கள், விளையாட்டு வீரர்களுக்கு இருக்க வேண்டிய குழு மனப்பான்மை, ஒழுக்கம், கட்டுப்பாடு, போட்டிகளில் பங்கேற்கும்போது கடைபிடிக்க வேண்டிய நுணுக்கங்கள் என்று அனைத்தையும் கற்றுக் கொடுக்கிறோம். குறைந்தபட்சம் 10 போட்டிகளை நடத்தி, அவர்களின் திறமையை வெளிக்காட்ட உதவுகிறோம். கட்டணம் ரூ.2,800. பேட் போன்ற பயிற்சி உபகரணங்களை மாணவர்களே கொண்டு வரவேண்டும்" என்கிறார் ஏவிஎம் அகாதெமியின் இயக்குநர் எம்.கே. இக்பால்.
விவரங்களுக்கு: 9840556215

குறும்படம் தயாரித்தல், தற்காப்புக் கலை
குறும்படம் தயாரிப்பதற்கும், பெண்களுக்கான தற்காப்புக் கலையை கற்றுக் கொடுக்கவும் இந்தக் கோடை விடுமுறையில் பயிற்சி அளிக்கிறது விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பிரேரனா ஈவண்ட்ஸ் மற்றும் மந்த்ரா ஈவண்ட்ஸ் அமைப்புகள். மூன்று வகையான பயிற்சிகளை இந்தக் கோடை விடுமுறையில் நடத்தவுள்ளோம். 5 முதல் 8 வயது வரையான குழந்தைகளுக்கான பயிற்சியில் ஓவியம், இசை, விளையாட்டு போன்றவை இடம்பெறும். 10 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு குறும்படம் தயாரிக்கப் பயிற்சியளிக்கிறோம். இதற்கென நிபுணர்களை வரவழைத்து முறைப்படி கற்றுத் தருகிறோம். அடுத்து, 8 முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கென தற்காப்புக்கலைப் பயிற்சியை அளிக்கவுள்ளோம். இதில் கராத்தே, யோகா போன்றவையும் அடங்கும். ஒவ்வொரு பயிற்சியும் 10 நாட்கள் நடைபெறும். குறும்படப் பயிற்சிக்கு கட்டணம் ரூ.2,500. தற்காப்புக் கலைக்கு ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை. குழந்தைகளுக்கான பயிற்சிக்கு ரூ.1,000. இந்தப் பயிற்சிகளைப் பெறும் மாணவர்களுக்கு எத்துறையில் ஆர்வம் உள்ளது என்பதை நாங்கள் கண்டறிந்து, அதைத் தொடர்ந்து பெறும்படி பெற்றோரிடம் பரிந்துரைக்கிறோம்" என்கிறார் இந்தப் பயிற்சிகளின் அமைப்பாளர் அனுராதா.
விவரங்களுக்கு: 9962085212

பத்திரிகைத் துறை
த்திரிகைத் துறையில் ஆர்வமும், ஈடுபாடும் கொண்ட மாணவர்கள் நிருபர்களாகவும், செய்தி சேகரிப்பாளர்களாகவும் பணியாற்ற வாய்ப்பு அளிக்கிறது ஆற்காடு ரோடு டைம்ஸ் இதழ். 9 மற்றும் 10-ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்கள் பத்திரிகையாளர்களாகப் பணியாற்ற பயிற்சி பெறலாம். வகுப்பறைப் பயிற்சியாக இல்லாமல், களமிறங்கி செய்திகளைச் சேகரித்து வரவேண்டியிருக்கும். அதற்குரிய ஆலோசனைகளும், தகவல்களும் மாணவர்களுக்கு வழங்கப்படும். செய்தி சேகரிக்கும் முறை, பேட்டி காணும் விதம் குறித்தெல்லாம் சொல்லித் தரப்படும். மாணவர்கள் அளிக்கும் செய்தியின் அடிப்படையில் அவர்கள் நிரந்தரமாகத் தொடர்ந்து செய்தி சேகரிப்பாளர்களாகப் பணியாற்றும் வாய்ப்புப் பெறலாம். இதற்கான கட்டணம் ரூ.500.
தொடர்புக்கு044 - 23764320 (மாலை 4 முதல் 9 வரை).

அறிவியல் பரிசோதனை
றிவியலில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்காக அறிவியல் பரிசோதனைப் பயிற்சிகளை அளிக்கிறது க்யூரியோ கிட்ஸ் அமைப்பு. நுங்கம்பாக்கம், சாலிக்கிராமம், வேளச்சேரி, தி.நகர், கே.கே.நகர், ராமாபுரம், கீழ்ப்பாக்கம் போன்ற இடங்களில் இந்த வகுப்புகள் நடைபெறுகின்றன. கோடை விடுமுறையை முன்னிட்டு 6 முதல் 8 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு ஒரு பிரிவாகவும், 9 முதல் 13 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு ஒரு பிரிவாகவும் பயிற்சியளிக்கப்படுகிறது. குழந்தைகள் தாங்களாகவே நேரடியாக, சுதந்திரமாக அறிவியல் பரிசோதனைகளை செய்து பார்க்க முடியும். இத்துறை நிபுணர்கள் அவர்களுக்கு வழிகாட்டுவார்கள். உதாரணமாக, மின்சாரத்தால் பொருட்கள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதை  பரிசோதனை மூலம் குழந்தைகள் உணர்ந்துகொள்ள முடியும். தாங்கள் செய்ததை வீட்டிற்கும் எடுத்துச் செல்லலாம். 5 நாட்களுக்கான பயிற்சி முகாமுக்கு கட்டணம் ரூ.1,800 முதல் ரூ.2,500. இதில் அறிவியல் பரிசோதனைகளுக்கான உபகரணங்களும் அடங்கும். ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் மே 9-ஆம் தேதி வரை முகாம் நடக்கிறது. தங்களுக்குப் பொருத்தமான தேதியை மாணவர்கள் தேர்ந்தெடுத்து பயிற்சியில் சேரலாம். இத்துறையில் பல்லாண்டுகள் அனுபவம் வாந்த ஆசிரியை நாகலட்சுமி குழுவினர் இந்த வகுப்புகளை நடத்துவார்கள்" என்கிறார் இந்த அமைப்பைச் சேர்ந்த கல்பனா.
இவரது தொடர்புக்கு: 9962166650, 9789854247.

இலவச கம்ப்யூட்டர், ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி
பிளஸ் டூ படித்த (தேர்வு எழுதிய) மாணவர்களுக்காக சென்னை திருநின்றவூர் அருகேயுள்ள கசுவா கிராமத்தில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சியும், ஆங்கிலப் பேச்சுப் பயிற்சியும் நடைபெறவுள்ளது. சேவாலயா தொண்டு நிறுவனம் இந்தப் பயிற்சிகளை நடத்தவுள்ளது. ஸ்கோப் இன்டர்நேஷனல் நிறுவனத்தைச் சேர்ந்த சாஃப்ட்வேர் என்ஜினீயர்கள் இந்தப் பயிற்சியை அளிக்கவுள்ளனர். ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை பயிற்சி நடைபெறும். பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள குடும்பத்தைச்  சேர்ந்த 150 மாணவர்கள் இந்தப் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பிளஸ் டூ முடித்துவிட்டு, என்ஜினீயரிங் போன்ற உயர் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சும், கம்ப்யூட்டர் அறிவும் அவசியம். அந்த மாணவர்களுக்கு உதவும் நோக்கில்தான் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது" என்கிறார் சேவாலயா அமைப்பின் நிறுவனர் முரளிதரன்.
விவரங்களுக்கு9444793505

தையல் பயிற்சி
10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ படித்த மாணவிகளுக்காக கோடை கால தையல் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்மார்ட் ஸ்கில்ஸ் தையல் பயிற்சிப் பள்ளி. 10 நாட்கள், 15 நாட்கள், ஒரு மாதம் என்று குறுகியக் கால தையல் பயிற்சிகளை நடத்துகிறோம். பிளவுஸ், கவுன், சுடிதார், ஜூட் பேக், பெட்டிகோட், மெஷின் எம்பிராடரி, குஷன் கவர், ஜர்தோஷி வேலைப்பாடுகள் போன்ற அனைத்து வகையான தையல் பயிற்சிகளையும் கொடுக்கிறோம். மாணவிகள் தங்களுக்குத் தேவையான வகுப்பில், வேண்டிய நேரத்தில் கலந்துகொண்டு பயிற்சி பெறலாம். குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவிகளுக்கு கட்டணத்தில் சலுகையும் உள்ளது. கோடைகாலப் பயிற்சி மட்டுமல்லாமல், மற்ற நாட்களிலும் பயிற்சி அளிக்கிறோம்" என்கிறார் இப்பயிற்சி மையத்தைச் சேர்ந்த ரஹ்மத்.
விவரங்களுக்கு9092041560

நடனம், சமையல், வன உயிரியல் ஆவணப்படம் தயாரித்தல்
முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நடனம், சமையல் போன்ற பலவிதமான பயிற்சிகளை கோடைகாலப் பயிற்சியாக அளித்து வருகிறது சென்னை ராஜா அண்ணாமலை புரத்தைச் சேர்ந்த வெண்ணிலா  சில்ட்ரன் பிளேஸ் அமைப்பு. 3 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஃப்ரீ ஸ்டைல் நடனம், இசை ஒர்க்‌ஷாப் போன்றவற்றை நடத்துகிறோம். 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சமையல் வகுப்பு நடத்துகிறோம். இதில் பாஸ்தாவைப் பயன்படுத்தி சமைப்பது, இனிப்பு வகைகள் செய்வது என்று அந்த வயதுக்கேற்ற பலகாரங்களைச் செய்யச் சொல்லிக் கொடுக்கிறோம். 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அறிவியல், கணிதம் போன்றவற்றில் ஒர்க்‌ஷாப்பும், தச்சுப் பயிற்சி வகுப்பும் நடத்துகிறோம். அத்துடன் காட்டு உயிரினங்கள் பற்றிய ஆவணப்படம் தயாரிக்கவும், ஸ்கிரிப்ட் எழுதவும் பயிற்சி அளிக்கிறோம். ஒரு நாள் மட்டுமே உள்ள பயிற்சிகளிலிருந்து ஒரு வாரம் வரையிலான பயிற்சிகளும் உள்ளன. அதற்கேற்ப ரூ.750 முதல் ரூ.3,500 வரை கட்டணம் நிர்ணயித்துள்ளோம். ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்குகின்றன" என்கிறார் இந்த அமைப்பின் இயக்குநர் ஸ்ரீலேகா.
விவரங்களுக்கு044-42066660

ஸ்போர்ட்ஸ் கேம்ப்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியிலுள்ள  (சென்னையிலிருந்து 25 கிலோ மீட்டர் தூரம்) வேலம்மாள் சர்வதேசப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள வேலம்மாள் நாலெட்ஜ் பார்க் சார்பில் கோடைகால ஸ்போர்ட்ஸ் கேம்ப் நடைபெறவுள்ளது. ஸ்கேட்டிங், நீச்சல், டென்னிஸ், கிரிக்கெட், டேபிள் டென்னிஸ், பாட்மிண்டன், கூடைப்பந்து, வாலிபால், கால்பந்து போன்ற விளையாட்டுக்களில் பிரத்யேகப் பயிற்சியளிக்கப்படுகின்றது. மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான ஒரு விளையாட்டைத் தேர்ந்தெடுத்து பயிற்சி பெறலாம். 10 நாட்கள் நடைபெறும் முகாமில், மாணவர்கள் இந்த வளாகத்திலேயே தங்கியிருந்து பயிற்சி பெறவேண்டும். மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் விளையாட்டு மட்டுமல்லாமல், இசை, ஃபைன் ஆர்ட்ஸ், கிராப்ட்ஸ், நடனம், மேடைப் பேச்சு, ரோபோட்டிக்ஸ், அனிமேஷன் போன்றவற்றிலும் அவர்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெறும். காலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மாணவர்களின் தினசரி நடவடிக்கைகள் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

சுகாதாரமான உணவு, தங்குமிடம் போன்றவற்றையும் அளிக்கிறோம். ஸ்கேட்டிங், நீச்சல், டென்னிஸ், கிரிக்கெட், பாட்மிண்டன் போன்ற விளையாட்டுப் பயிற்சிகளுக்கு ஒரு பயிற்சிக்கு ரூ.5,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடைப்பந்து, வாலிபால், கால்பந்து, டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுப் பயிற்சிகளில் ஒரு பயிற்சிக்கான கட்டணம் ரூ.2,000. மாணவர்களுக்கான தங்குமிடம், உணவு போன்ற அனைத்தும் இந்தக் கட்டணத்தில் அடங்கும். தகுதியான பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும். ஏப்ரல் 18-ஆம் தேதியிலிருந்து 27-ஆம் தேதி வரை ஒரு முகாமும், மே 2-ஆம் தேதியிலிருந்து மே 11-ஆம் தேதி வரை மற்றொரு முகாமும் நடைபெறும்" என்கிறார் முகாம் ஒருங்கிணைப்பாளர்.
விவரங்களுக்கு9159705557, 7299067906, 8791290862

ரோபோட்டிக்ஸ்
ள்ளி மாணவர்கள் மத்தியில் ரோபோட்டிக்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களைக் கொண்டே ரோபோவை உருவாக்கவும் கோடைகாலப் பயிற்சியளிக்கிறது சென்னையைச் சேர்ந்த ஐவிஸ் ஆன்ட்ராய்டு ரோபோ நிறுவனம். சென்னையில் அசோக் நகர் மற்றும் தி.நகர் ஆகிய இரண்டு இடங்களில் எங்களின் பயிற்சி மையங்கள் உள்ளன. மாணவர்கள் எதில் வேண்டுமானாலும் சேரலாம். 7 வயது முதல் கல்லூரி வயது வரையான மாணவர்கள் யார் வேண்டுமானாலும் இப்பயிற்சியில் சேர முடியும். 10 நாட்கள் நடைபெறும் பயிற்சிக்கான கட்டணம் ரூ.3,000. பயிற்சிக்கான உபகரணங்களையும் நாங்களே வழங்குகிறோம். ஒரு நாளைக்கு 4 மணி நேரம் வீதம் மொத்தம் 40 மணி நேரம் பயிற்சி இருக்கும். முகாமில் 8 ரோபோக்களை வடிவமைக்கப் பயிற்சி தருவோம். 7 ரோபோக்களை நாங்கள் கொடுக்கும் புரோகிராம்கள், பயிற்சிகளைக் கொண்டு உருவாக்க வேண்டும். 8-ஆவது ரோபோவை மாணவர்களே தங்கள் சொந்த முயற்சியால் உருவாக்கும் வகையில் பயிற்சியளிப்போம். இந்தப் பயிற்சியினால் மாணவர்களின் படைப்பாக்க சிந்தனை அதிகரிக்கும், ரோபோட்டிக்ஸ் குறித்த அறிவு மேம்படும். ஏற்கெனவே எங்கள் நிறுவனம் ஒரு சில பள்ளிகளுடன் இணைந்து மாணவர்களுக்கு ரோபோட்டிக்ஸ் பயிற்சி அளித்து வருகிறது. கோடைகாலப் பயிற்சியின் மூலம் மேலும் பல மாணவர்கள் இப்பயிற்சியைப் பெற முடியும். பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்குகிறோம்" என்கிறார் ரோபோட்டிக்ஸ் பயிற்சியாளர் கிங்ஸ்லி.
விவரங்களுக்கு: 9551277111, 9551077222

பெட்ரோலியத் துறையில் பி.டெக். படிப்புகள்!

பெட்ரோலியத் துறையில் பி.டெக். படிக்க விரும்பும் பிளஸ் டூ படித்த மாணவர்கள், டேராடூனில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் பெட்ரோலியம் அண்ட் எனர்ஜி ஸ்டடீஸ் நடத்தும் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.

த்தரகாண்ட் மாநிலம் டேராடூனிலுள்ள  யுனிவர்சிட்டி ஆஃப் பெட்ரோலியம் அண்ட் எனர்ஜி ஸ்டடீஸ் கல்வி நிலையத்தில் பெட்ரோலியம், கேஸ், கெமிக்கல், ஜியோ-சயின்ஸ், ஜியோ-இன்பர்மேட்டிக், ஏரோஸ்பேஸ், ஆட்டோமோட்டிவ், எலெக்ட்ரானிக்ஸ், மெகட்ரானிக்ஸ், ஃபயர் அண்ட் சேப்டி, மெட்டீரியல் சயின்ஸ், ஏவியானிக்ஸ், சிவில், பவர் சிஸ்டம், மைனிங்,  டெக்னோ லீகல், சூப்பர் ஸ்பெஷலைஸ்டு கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் வித் ஸ்பெஷலைசேஷன் இன் டெலிகாம் இன்பர்மேட்டிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுகளில் பி.டெக். படிப்புகள் உள்ளன. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், பிளஸ் டூ தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடப் பிரிவுகளில் சேர்த்து குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

ஷில்லாங்கிலுள்ள  யுனிவர்சிட்டி ஆஃப் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மெண்ட் கல்வி நிலையத்தில் பெட்ரோலியம், எலெக்ட்ரானிக்ஸ், சிவில், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் வித் ஸ்பெஷலைசேஷன் இன் கிளவுட் கம்ப்யூட்டிங் அண்ட் வெர்ச்சுவலைசேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் பி.டெக். படிக்கலாம். 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், பிளஸ் டூ தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடப் பிரிவுகளில் சேர்த்து குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

இந்த இரு கல்வி நிறுவனங்களிலும் உள்ள படிப்புகளில் சேர்க்க UPESEAT  என்கிற பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். ஆக்ரா, அலகாபாத், சென்னை, தில்லி, ஹைதராபாத், பெங்களூர் உள்ளிட்ட பல நகரங்களில் நுழைவுத் தேர்வு நடைபெறும். அப்ஜெக்ட்டிவ் முறையில் நடைபெறும் நுழைவுத் தேர்வில் கணிதம், வேதியியல், இயற்பியல் போன்ற பாடங்களிலிருந்து தலா 50 கேள்விகள் கேட்கப்படும். ஆங்கில காம்ப்ரிஹென்சனில் 30 கேள்விகளும், கரண்ட் அபையர்ஸ் அண்ட் அவேர்னஸ் பிரிவில் 20 கேள்விகளும் கேட்கப்படும். மொத்தம் 200 மதிப்பெண்கள். மூன்று மணி நேரங்களுக்குத் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிப்பது எப்படி?: இந்த நுழைவுத் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.1,750. இதை கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலமாக விண்ணப்பத்துடன் செலுத்த வேண்டும் அல்லது குறிப்பிட்ட சில நகரங்களில் உள்ள ஆக்ஸிஸ் வங்கிக் கிளைகளில் ரூ.1,750-ஐ ரொக்கமாகச் செலுத்தி விண்ணப்பத்தையும், விளக்கக் குறிப்பேட்டையும் பெற்றுக் கொள்ளலாம் அல்லது ரூ.1,850-க்கான டிமாண்ட் டிராப்ட்டை ‘க்கஉகு UPES Fee Account ‘ payable at New Delhi / Dehradun   என்கிற பெயருக்கு எடுத்து அனுப்பி பெற்றுக்கொள்ளவேண்டும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து பிரிண்ட் அவுட் எடுத்து, தில்லியில் உள்ள என்ரோல்மெண்ட் அலுவலகத்திற்கோ அல்லது டேராடூனில் உள்ள அலுவலகத்திற்கோ கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.05.2014
நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி24.05.2014
விவரங்களுக்கு: www.upes.ac.in

வெளிநாடுகளில் படிக்க ஆர்வமா? : தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித்தொகை

வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்பும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் சீர்மரபைச் சேர்ந்த நாடோடி பழங்குடி இன மாணவர்களுக்கும்  நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் மற்றும்  பாரம்பரியக் கலைஞர்கள் குடும்பங்களைச்  சேர்ந்த மாணவர்களுக்கும் மத்திய அரசின் சமூக நீதி அமைச்சகம் கல்வி உதவித்தொகை வழங்குகிறது.

வெளிநாடுகளில் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கும். ஆனால், அதற்கு கல்வி உதவித்தொகை கிடைக்குமா என்று ஏங்கி நிற்கும் மாணவர்களும் உண்டு. வங்கிகளில் கடன் உதவி பெறலாம்தான். ஆனால், அதற்கான உத்தரவாதம் கொடுக்க அசையாச் சொத்துக்கு எங்கே போவது? தாழ்த்தப்பட்ட ஏழை மாணவர்களின் நிலைமையைக் கேட்க வேண்டாம். வறுமைச் சூழ்நிலையிலும் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்றாலும்கூட அவர்களை கைதூக்கி விட மற்றவர்களை எதிர்பார்க்க வேண்டியது உள்ளது. இந்தச் சூழ்நிலையில், தாழ்த்தப்பட்ட மாணவர்களும் வெளிநாடுகளில் சென்று படிப்பதற்கு கல்வி உதவித்தொகையை மத்திய சமூக நீதி அமைச்சகம் வழங்குகிறது. தாழ்த்தப்பட்ட, சீர்மரபு பழங்குடியினர் மற்றும் நிலமில்லாத விவசாயத் தொழிலாளர்கள், பாரம்பரியக் கலைஞர்கள் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் படிப்பதற்கான கல்வி உதவித்தொகையை மத்திய சமூக நீதி அமைச்சகம் வழங்குகிறது. வெளிநாடுகளில் முதுநிலை பட்டப் படிப்போ அல்லது பிஎச்டி ஆய்வுப் படிப்போ படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.

தாழ்த்தப்பட்ட இனத்தைச்  சேர்ந்த 54 மாணவர்களுக்கும் சீர்மரபைச் சேர்ந்த நாடோடி பழங்குடியைச் சேர்ந்த 4 மாணவர்களுக்கும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பாரம்பரியக் கலைஞர்கள் குடும்பங்களைச் சேர்ந்த  2 மாணவர்களுக்கும் வெளிநாடுகளில் படிக்க கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
என்ஜினீயரிங் அண்ட் மேனேஜ்மெண்ட் துறையில் படிக்க 20 பேருக்கும் பியூர் சயின்ஸ் அண்ட் அப்ளைடு சயின்ஸ்,  அக்ரிகல்ச்சுரல் சயின்ஸ் அண்ட் மெடிசின், இன்டர்நேஷனல் காமர்ஸ் அண்ட் அக்கவுண்டிங் ஃபைனான்ஸ், ஹியுமானிடிஸ், சோஷியல் சயின்ஸ் அண்ட் ஃபைன் ஆர்ட்ஸ் ஆகிய ஐந்து பாடப்பிரிவுகளில் தலா 10 மாணவர்கள் வீதம் மொத்தம் 60 மாணவர்கள் இந்த கல்வி உதவித்தொகை பெற தேர்வு செய்யப்படுவார்கள். இதுதவிர, 5 பேருக்கு வெளிநாட்டுப் பயணத்துக்கான மானியத் தொகை வழங்கப்படும். இந்த வெளிநாட்டுப் பயண மானியத் தொகையைப் பெறுவதற்கு, முதுநிலை பட்டப் படிப்பு படித்து இருக்க வேண்டும். வெளிநாட்டில் முதுநிலைப் படிப்பு, ஆராய்ச்சி அல்லது பயிற்சி பெற மெரிட் ஸ்காலர்ஷிப் பெற்றிருக்க வேண்டும்.

இந்தக் கல்வி உதவித்தொகை பெற என்ன தகுதி வேண்டும்?
பிஎச்டி படிக்க விரும்பும் மாணவர்கள் முதுநிலை பட்டப் படிப்பில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அனுபவம் மிக்க விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களும் இளநிலை பட்டப் படிப்பில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். அனுபவம் மிக்க விண்ணப்பதாரர்களுக்கு இந்தக் கல்வி உதவித்தொகை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் மாணவர்கள் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.6 லட்சத்துக்கு மேற்படாமல் இருக்க வேண்டும். பணிபுரியும் விண்ணப்பதாரர்கள் வருமான வரித்துறைக்கு சமர்ப்பித்த வருமான வரிக் கணக்கு மற்றும் பணிபுரியும் நிறுவனத்திலிருந்து ஊதியச் சான்றிதழையும் பெற்று அனுப்ப வேண்டும். அத்துடன் ஆட்சேபணை இல்லை  (என்.ஓ.சி.) சான்றிதழையும் பெற வேண்டும். ஏற்கெனவே இந்தக் கல்வி உதவித்தொகை பெற்று வெளிநாட்டில் படித்தவர்கள் மீண்டும் படிக்க இந்த உதவித்தொகை பெற முடியாது. அதேசமயம், ஒரே குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் வரை இந்தக் கல்வி உதவித்தொகை பெற அனுமதிக்கப்படுவார்கள்.

வெளிநாடுகளில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் 2013-14  கல்வி ஆண்டிலிருந்து படிக்க அட்மிஷன் பெற்றுள்ளவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். படிக்கச் சேர்ந்துள்ள கல்வி நிறுவனம் தர அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவர்களுக்கு முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் இந்தக் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். வெளிநாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் அட்மிஷன் பெறுவதற்கு முயற்சி செய்யும் தகுதியுடைய மாணவர்களுக்கும் இந்தக் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். அந்த மாணவர்களுக்கு இந்தச் சலுகை ஓராண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும். இந்தக் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடைய  இரண்டு பேர் சமநிலையில் இருந்தால், வயதில் மூத்தவர் அந்தக் கல்வி உதவித்தொகை பெற தேர்வு செய்யப்படுவர். வேலை பார்க்கும் விண்ணப்பதாரர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்திடமிருந்து ஆட்சேபணை இல்லை சான்றிதழ் வாங்கி அனுப்ப வேண்டும்.

வெளிநாட்டில் படிக்க எவ்வளவு உதவித்தொகை கிடைக்கும்?
பிஎச்டி படிக்கும் மாணவர்களுக்கு நான்கு ஆண்டு காலத்துக்கும் முதுநிலை பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு மூன்று ஆண்டு காலத்துக்கும் இந்தக் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். பிரிட்டன் தவிர அமெரிக்கா உள்பட மற்ற நாடுகளில் படிப்பதற்கு ஆண்டுக்கு 15,400 டாலர்கள் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். பிரிட்டனில் படிக்கும் மாணவர்களுக்கு 9,900 பிரிட்டிஷ் பவுண்ட் வழங்கப்படும். இந்தக் கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் நாடுகளில் ரிசர்ச் மற்றும் டீச்சிங்  அசிஸ்டென்ஷிப் மூலம் சம்பாதித்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

பிரிட்டன் நீங்கலாக அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் படிக்கச் சேரும் மாணவர்கள் புத்தகங்கள், உபகரணங்கள், ஸ்டடி டூர், கருத்தரங்குகளில் பங்கேற்கச் செல்வதற்கான பயணச் செலவு, ஆய்வுக் கட்டுரையை டைப் செய்தல் பைண்ட் செய்தல் ஆகியவற்றுக்கான செலவுகளுக்காக ஆண்டுக்கு 1,500 டாலர் வழங்கப்படும். பிரிட்டனில் படிக்கும் மாணவர்களுக்கு இந்தச் செலவுகளுக்காக ஆண்டுக்கு 1,100 பவுண்ட் வீதம் வழங்கப்படும். விசா கட்டணம், மருத்துவ இன்சூரன்ஸ் கட்டணம், விமானப் பயணக் கட்டணம் உள்ளிட்ட செலவுகளுக்கும் உரிய உதவித்தொகை வழங்கப்படும். படிப்பு முடிக்கும் வரை இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் மாணவர்கள் இருவரிடம் தலா ரூ.50 ஆயிரத்துக்கான உத்தரவாதப் பத்திரத்தைப் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களிலோ அல்லது கல்வி நிறுவனங்களிலோ அட்மிஷன் பெற வேண்டியது மாணவர்களின் பொறுப்பு. இந்திய அரசின் தூதரக உறவு உள்ள நாடாகவும் அங்குள்ள கல்வி நிறுவனம் தர அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனமாக இருக்க வேண்டியதும் அவசியம். திருமணமான விண்ணப்பதாரர்கள், தாங்கள் படிக்கும் காலத்தில் மனைவி, குழந்தைகளை அழைத்துச் செல்ல விரும்பினால் அதற்கான அனைத்துச் செலவுகளையும் விண்ணப்பதாரர்களே ஏற்றுக்கொள்ள வேண்டியதிருக்கும். படிப்புக் காலத்தில் தவிர்க்க முடியாத அவசரக் காரணங்களால் தாய்நாட்டுக்கு வந்து செல்ல வேண்டியதிருந்தால்,  சம்பந்தப்பட்ட மாணவர்கள்தான் அதற்கான செலவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். படிப்புக் காலத்தில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாணவர்களின் படிப்பு குறித்து அங்குள்ள இந்தியத் தூதரகம், பல்கலைக்கழகத்திடம் அறிக்கையை கேட்டுப் பெறும். இந்த உதவித்தொகை பெற தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, படிப்பை மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது. எனினும், ஆராய்ச்சிக்கு வழிகாட்டும் பேராசிரியர் அந்தப் பல்கலைக்கழகத்தை விட்டு விட்டுப் போதல் போன்ற நிலைமைகளில் வேறு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பைத் தொடர அனுமதிப்பது குறித்து அந்த நாட்டில் உள்ள இந்தியத் தூதரகம் முடிவு செய்யும்.

படிப்புக்காலம் முடிந்ததும் தேவையைக் கருத்தில் கொண்டு மேலும் இரண்டு ஆண்டு காலம் அந்த மாணவரை தங்க அனுமதிப்பது குறித்து அரசு பரிசீலனை செய்யும். ஆனால், அந்தக் கால கட்டத்துக்கு நிதியுதவி எதுவும் வழங்கப்பட மாட்டாது. இந்தக் கல்வி உதவித்தொகை பெற்று வெளிநாட்டில் படித்துவிட்டு இந்தியா வருபவர்கள், அடுத்த ஐந்து ஆண்டுகள் இந்தியாவிலேயே இருக்க வேண்டும். அரசுப் பணியில் இருந்து கொண்டே இந்தக் கல்வி உதவித்தொகை பெற்று வெளிநாடுகளுக்குப் படிக்கச்  சென்றவர்கள், திரும்பி வந்து குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது அரசுப் பணியில் இருக்க வேண்டும்.

இந்த உதவித்தொகை பெற எப்படி விண்ணப்பிப்பது?
இந்த கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான விளம்பர அறிவிப்பு வெளியிடப்பட்டு 45 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அனைத்து படிப்புச் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், பிறந்த தேதிச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களின் நகல்களை சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும். வெளிநாட்டில் படிக்க பயண உதவித்தொகை கோரும் மாணவர்கள், அதற்கான சான்றிதழ்களின் நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை தில்லியிலுள்ள சமூக நீதி அமைச்சகத்தின் சார்புச் செயலர் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இந்தக் கல்வி உதவித்தொகை பெறுவதற்குத் தகுந்த விண்ணப்பதாரர்களை மத்திய சமூக நீதி அமைச்சகத்தின் தேர்வுக் குழு தேர்வு செய்யும். இந்த உதவித்தொகை பெறுவதற்கான தகுதி உள்ளிட்ட விரிவான தகவல்கள் சமூக நீதி அமைச்சகத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

விவரங்களுக்குwww.socialjustice.nic.in

காலையில் கல்லூரி; மாலையில் பழக்கடை!


பழங்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்துகொண்டே சென்னை பாரதி மகளிர் அரசு கல்லூரியில் எம்.எஸ்சி. படித்து வருகிறார் காயத்ரி.

காரைக்குடிதான் எங்களது சொந்த ஊர். இருபது ஆண்டுகளுக்கு முன்பு எங்களது குடும்பம் சென்னையிலுள்ள சாலிகிராமத்திற்கு குடிபெயர்ந்தது. என் அப்பா குமார். எட்டாவது வரைக்கும்தான் படிச்சிருக்கார். அவருக்கு தச்சு வேலை. அம்மா சாந்தியும் எட்டாவது வரைக்கும்தான் படிச்சிருக்காங்க. எனக்கு ஒரு தம்பி. அவன் இப்போ ஒன்பதாவது படிச்சிகிட்டிருக்கான்.

எனது பள்ளிப்படிப்பை விருகம்பாக்கத்திலுள்ள ஜெய்கோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முடித்தேன். பத்தாம் வகுப்பில் 409 மதிப்பெண்கள் எடுத்து, பிளஸ் ஒன்னில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் சேர்ந்தேன். நன்றாகப் படித்துக் கொண்டிருந்த எனக்கு, பிளஸ் டூ படிக்கும் போது சிக்குன் குனியா காய்ச்சல் வந்ததால் இரண்டு மாதங்கள் பள்ளிக்கே போகமுடியவில்லை. அப்படி இருந்தும் கஷ்டப்பட்டு தேர்வை எழுதி, 708 மதிப்பெண்களுடன் பாஸாகிவிட்டேன்.

டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் பி.எஸ்சி. பயோ கெமிஸ்ட்ரி படிக்க இடம் கிடைத்தது. அது தனியார் கல்லூரி என்பதால் ஓர் ஆண்டிற்கு 20 ஆயிரம் ரூபாய் அளவிற்கு கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. அப்போது என் அம்மா, மகளிர் சுய உதவிக் குழு மூலம் கடன் வாங்கி என்னைப் படிக்க வைத்தார். வாடகை வீட்டில் நாங்கள் வசித்து வருவதால், அப்பாவின் வருமானம் குடும்பத்துச் செலவுகளைச் சமாளிக்கவே பற்றாக்குறையாக இருந்தது.

இந்த நிலையில் படிப்புச் செலவும் இருந்தது. அப்போதுதான் நாமும் பகுதிநேர வேலைக்குப் போனால் என்ன என்று தோன்றியது. சாலிகிராமத்திலுள்ள பழக்கடை ஒன்றில் வேலை கேட்டேன். ‘இங்கே பகுதி நேரமாக யாரையும் வேலைக்கு சேர்த்துக்கொள்வதில்லை’ என்றனர்.

படித்துக்கொண்டே வேலை செய்தால், படிப்புச் செலவுகளை என்னால் பார்த்துக்கொள்ள முடியும் என்று, அவர்களிடம் வேண்டுகோள் வைத்தேன். ‘படிப்பதற்காக என்பதால், பகுதி நேர வேலைக்கு சேர்த்துக் கொள்கிறேன்’ என்று சேர்த்துக் கொண்டனர். தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9.30-லிருந்து 10 மணி வரை வேலை இருக்கும். அப்படி வேலை பார்த்தால் ஒரு நாளைக்கு 50 ரூபாய் கிடைக்கும். சனி, ஞாயிறு முழுநாள் வேலை செய்யவேண்டும். அப்படிச் செய்தால் ஒரு நாளைக்கு 150 ரூபாய் கிடைக்கும். இப்படி வேலை பார்த்துக் கொண்டே பி.எஸ்சி. படித்து முடித்தேன்.

பி.எஸ்சி. படித்து முடித்ததும் வேலைக்குத்தான் போக இருந்தேன். ஆனால் எனது ஆசிரியர்களின் தூண்டுதல்களால், பிராட்வேயிலுள்ள பாரதி மகளிர் கல்லூரியில் எம்.எஸ்சி வேதியியல் படித்துக் கொண்டிருக்கிறேன். காலையில் படிப்பது, கல்லூரிக்குச் செல்வது, மாலையில் பணி, இரவு நேரத்தில், அஸைன்மெண்ட் எழுதுவது என தினமும் பரபரப்பாக போகிறது எனது வாழ்க்கை. வேலை செய்துகொண்டே பி.எஸ்சி படித்து விட்டேன், ஆனால் எம்.எஸ்சி படிப்பது கடினமாக இருக்கிறது. நிறைய படிக்க வேண்டி இருக்கிறது. எழுத வேண்டி இருக்கிறது. இருந்தாலும் நான் செய்யும் வேலை எனது படிப்பு செலவுக்குப் பயன்படுகிறது என்பதால், அதை விடாமல் செய்து கொண்டிருக்கிறேன்.

நன்கு படித்து ஐ.ஏ.எஸ். ஆகவேண்டும், இல்லை யென்றால் நானும் ஒரு பேராசிரியராக வர வேண்டும் என்பதே எனது எதிர்கால லட்சியம்”  என்கிறார் தன்னம்பிக்கை மாணவி காயத்ரி.

மின்னஞ்சல் +2 மாணவர்கள் கல்லூரிப் படிப்புகளை தேர்வு செய்வது எப்படி?

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மே மாதம் 9-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. கல்லூரிகளையும் சரியான படிப்புகளைத் தேர்ந்தெடுப்பதிலும் மாணவர்களும் பெற்றோர்களும் சிந்தித்துச்  செயல்பட வேண்டிய நேரம் இது.

பிளஸ் டூ தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில்தான் படிப்புகளில் சேர முடியும் என்றாலும்கூட, மாணவர்களின் ஆர்வம், திறமை, குடும்பப் பொருளாதார நிலைமை போன்ற  பல்வேறு விஷயங்களைக் கருத்தில் கொண்டு கல்லூரிப் படிப்புகளில் சேருவதில் முடிவெடுக்க வேண்டியதிருக்கும். ஆதலால், முன்னதாகவே சேர விரும்பும் படிப்புகளையும் சேர விரும்பும் கல்லூரிகளையும் உத்தேசமாக முடிவு செய்து வைத்துக்கொள்வது நல்லது.

பெரும்பாலான மாணவர்கள் மருத்துவம், பொறியியல் போன்ற தொழில்நுட்பப் படிப்புகளில் சேருவதில் தீவிர ஆர்வம் காட்டுகிறார்கள். வேறு பலர் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நினைப்பார்கள். எந்தக் கல்லூரிகளில் சேர நினைக்கிறோம் என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும்.

கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்த மாணவர்கள் தங்களின் சாய்ஸ் மருத்துவமா, பொறியியலா என்பதை மதிப்பெண்களைப் பார்த்து முதலிலேயே தீர்மானித்து விடுவது நல்லது. மருத்துவப் படிப்பைத் தேர்வு செய்து விட்டு, பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கவுன்சலிங்கிற்கு வந்தாலும்கூட, அந்தக் கட்டத்தில் ஏதாவது ஒன்றுதான் என்பதை முடிவு செய்துவிட வேண்டியதிருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று நினைத்தால், நிச்சயம் இடம் கிடைக்கும். அந்த அளவுக்கு ஏராளமான இடங்கள் உள்ளன. நல்ல தரம் வாய்ந்த பொறியியல் கல்லூரிகளில் நாம் நினைக்கும் படிப்புகளில் சேர வேண்டும் என்றால், நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். கல்லூரிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கின்றன? அங்கு படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் எப்படி இருக்கிறது? தரம் வாய்ந்த ஆசிரியர்கள் இருக்கிறார்களா? கல்லூரிகளில் வேலைவாய்ப்புக்கு உதவும் ஆளுமைப் பயிற்சி அளிக்கப்படுகிறதா? கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைவாய்ப்புக் கிடைக்கிறதா என்பதையெல்லாம் பார்த்து கல்லூரியைத் தேர்வு செய்ய வேண்டும்.

புதிய கல்லூரிகளைவிட, ஏற்கெனவே பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கல்லூரிகளில் குறிப்பாக, முதுநிலைப் பட்ட வகுப்புகள் உள்ள கல்லூரிகளில் குறைந்தபட்ச  வசதிகள் செய்யப்பட்டிருக்கும் என நம்பலாம். எனினும், நாம் சேர விரும்பும் கல்லூரிகளை நேரில் சென்று பார்த்து வருவது நல்லது.  அங்கு படித்து வரும் மாணவர்களிடம் கல்லூரி பற்றி விசாரித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.

பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டின்கீழ் சேர விரும்பும் கல்லூரிகளில் முந்தைய ஆண்டின் கட் ஆஃப் மார்க் எவ்வளவு என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப கல்லூரிகளையும் பாடப்பிரிவுகளையும் முடிவு செய்துகொள்ளலாம். நாம் விரும்பும் நல்ல கல்லூரியில் குறிப்பிட்ட பாடத்தில் இடம் கிடைக்காமல் இருந்தாலும், அதே கல்லூரியில் வேறு பாடப்பிரிவுகளில் காலி இடங்கள் இருந்தால் அதை எடுத்துக் கொள்ளப் போகிறோமா அல்லது வேறு கல்லூரியில் அதே பாடப் பிரிவைத் தேர்வு செய்துகொள்ளப் போகிறோமா என்பதையும் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். அதற்கேற்ப கல்லூரி மற்றும் பாடப்பிரிவு வரிசைப் பட்டியலை தயார் செய்து வைத்துக் கொள்வதன் மூலம் கடைசி நேர பரபரப்பைத் தவிர்க்க முடியும். நிர்வாக ஒதுக்கீட்டின்கீழ் சேர விரும்பும் மாணவர்கள், அதற்கான நிதி ஆதாரங்கள் குறித்து பெற்றோர்களுடன் கலந்து பேசி முடிவு செய்து கொள்ள வேண்டும்.

பிளஸ் டூ தேர்வில் மிக அதிக மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்குத்தான் எம்பிபிஎஸ் படிப்பில் சேர இடம் கிடைக்கும். கடந்த ஆண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர எவ்வளவு கட் ஆஃப் மதிப்பெண்கள் இருக்கிறது என்பதைப் பார்த்து உத்தேசமாக நமக்கு எம்பிபிஎஸ் படிப்பில் இடம் கிடைக்குமா? என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். எம்பிபிஎஸ் படிப்பில் சேர முடியவில்லை என்றால், பிடிஎஸ் படிப்பில் சேர்ந்து படிக்கப் போகிறோமா அல்லது வேறு படிப்பில் சேரப் போகிறோமா என்பதையும் யோசித்து வைத்துக்கொள்ள வேண்டும். அரசு ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் படிப்பில் இடம் பெற இயலாவிட்டால், சுயநிதிக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க வேண்டும் என்றால், அதற்கேற்ற பொருளாதார வசதி இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு அந்தப் படிப்பில் சேர இடம் கிடைக்காவிட்டால், அடுத்த சாய்ஸ் என்ன என்பதை முன்னதாக தீர்மானித்து அதற்காக விண்ணப்பித்துவிட வேண்டியது அவசியம்.

குறைந்த செலவில் வெளிநாடுகளில் போய் எம்பிபிஎஸ் படிக்க விரும்பும் மாணவர்கள், வெளிநாட்டு எம்பிபிஎஸ் படிப்பு குறித்து முழுமையாகத் தெரிந்திருப்பது இல்லை. அங்கு படித்து முடித்துவிட்டு இங்கே இந்திய மருத்துவக் கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற வேண்டும். அதன் பிறகு, இங்குள்ள மருத்துவமனையில் இன்டர்ன்ஷிப் பெற வேண்டியதிருக்கும். இதற்கு ஆகும் காலக் கணக்கையும் மாணவர்கள் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

விரும்பும் கல்லூரியில் விரும்பும் பாடப்பிரிவுகளில் இடம் இல்லாமல் இருக்கலாம். விருப்பமில்லாத கல்லூரிகளில் விரும்பும் பாடப்பிரிவுகளில் இடம் இருக்கலாம். நாம் நினைக்கும் கல்லூரியோ, பாடப்பிரிவோ கிடைக்காவிட்டால், நமது அடுத்த சாய்ஸ் என்ன என்பதை வரிசைப்படுத்திக்கொள்ள வேண்டும். மாணவர்களின் ஆர்வம், திறமை, தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், குடும்பச் சூழ்நிலை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு எதிர்காலப் படிப்பைத் திட்டமிட வேண்டும்.

பல நேரங்களில் மாணவர்களின் விருப்பமும் பெற்றோர்களின் விருப்பமும் ஒன்றாக இருப்பதில்லை. மாணவர்களின் விருப்பத்திற்கு மாறாக பெற்றோர்கள் தங்களது விருப்பங்களை குழந்தைகளிடம் திணிக்கக்கூடாது. மாணவர்களின் விருப்பத்திற்கு மாறான படிப்புகளில் சேர்த்தால், அந்தப் படிப்பில் மாணவர்களுக்கு ஆர்வம் இருக்காது. அந்த, அதிருப்தி, பாடங்களில் பிரதிபலிக்கக்கூடும்.

மாணவர்கள் ஆர்வத்துடன் சேர விரும்பும் படிப்பு, அந்த மாணவருக்கு ஏற்றதாக இருக்காது என கருதும் பட்சத்தில் அதற்கான காரணங்களை விளக்கிக் கூறி, அவர்களை சமாதானப்படுத்த வேண்டும். படிப்பு என்பது விருப்பம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, துறைசார் அறிவும் திறமையும் சம்பந்தப்பட்டது என்பதையும் அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும்.

சில மாணவர்களுக்கு எந்த ஒரு பாடத்திலும் பெரிய ஈடுபாடு இருக்காது. அதுபோன்ற சூழ்நிலையில் மாணவர்களின் திறமையைக் கருத்தில்கொண்டு அவர்களுக்கு ஏற்ற படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும். இதற்காக ஆசிரியர்கள் உள்ளிட்ட மற்றவர்களின்  ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. தங்களது உறவினர்களின் குழந்தைகள் படிக்கிறார்கள் என்றோ, பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் படிக்கிறார்கள் என்றோ ஒரு பாடப்பிரிவில் சேர்க்க முயல வேண்டாம். அவர்களது குழந்தையின் சூழ்நிலைக்கு ஏற்ப, படிப்பைத் தேர்வு செய்திருப்பார்கள். நாம் நமது குழந்தைகளின் திறமைக்கேற்ற படிப்பைத் தேர்வு செய்தால் அந்த மாணவரின் எதிர்காலம் நன்றாக இருக்கும்.

கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு ஒற்றைச்சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதில்லை என்பதால், மாணவர்கள் தாங்கள் பெற்றுள்ள மதிப்பெண்களுக்கு ஏற்ப, விரும்பும் சில கல்லூரிகளைத் தேர்வு செய்து, தாங்கள் விரும்பும் பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட படிப்புகளில் எந்த வகையான துணைப் பாடங்கள் இருக்கிறது என்பதையும் கருத்தில் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட கல்லூரியில் ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் தனித்தனி விண்ணப்பங்கள் போட வேண்டியதிருக்கும். அதேபோல, ரெகுலர் வகுப்புகளுக்கும் சுயநிதி வகுப்புகளுக்கும் தனித்தனியே உரிய காலத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் அட்மிஷன் கிடைத்தால், எந்தக் கல்லூரியில் எந்தப் படிப்பில் சேருவது என்பதை உடனடியாகத் தீர்மானித்து குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டணத்தைச் செலுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால், கிடைத்த அட்மிஷன் ரத்தாகி விடும் சாத்தியம் உள்ளது. கல்லூரி அட்மிஷன் பட்டியல் காத்திருப்போர் பட்டியலில் இருந்தால், அதற்காக எவ்வளவு காலம் காத்திருப்பது அல்லது அட்மிஷன் கிடைத்த இடத்தில் சேர்ந்து விடலாமா என்பது குறித்து நிலைமைக்குத் தகுந்தபடி முடிவு எடுத்துச் செயல்பட வேண்டும்.

வேளாண்மை, கால்நடை மருத்துவம், சட்டம் போன்ற படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களும் அதற்குத் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரை கல்லூரிகளில் சேர நுழைவுத் தேர்வு இல்லை. என்றாலும், பல்வேறு தொழிற்படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதாவது ஹோட்டல் மேனேஜ்மெண்ட், ஃபேஷன் டிசைன், ஃபேஷன் டெக்னாலஜி போன்ற படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டியதிருக்கும். இதேபோல, பிளஸ் டூ படித்து முடித்த மாணவர்களுக்காக பல்வேறு முக்கியக் கல்வி நிலையங்களில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த அறிவியல் படிப்புகள் உள்ளன. அதில் சேரவும் நுழைவுத் தேர்வு எழுத வேண்டியதிருக்கும். நேஷனல் லா ஸ்கூல் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களிலும் நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கப்படுகிறார்கள். இதேபோல, பிஆர்க் படிக்க விரும்பும் மாணவர்களும் அதற்கான நேட்டா நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். நுழைவுத் தேர்வு எழுதியவர்கள், சில நேரங்களில் சம்பந்தப்பட்ட கல்வி நிலையத்திற்குத் தனியே விண்ணப்பிக்க வேண்டியதிருக்கலாம்.

சிஏ, ஏசிஎஸ், காஸ்ட் அக்கவுண்டிங் போன்ற படிப்புகளில் சேர விரும்பும் பிளஸ் டூ படித்த மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களை அணுகி, தனியே விண்ணப்பிக்க வேண்டும். அதுகுறித்த விவரங்களை இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். நேரில் சென்றும் விவரங்களை அறியலாம்.

கல்லூரியில் படித்துக்கொண்டே சி.ஏ. படிக்கமுடியாது. தொலைநிலைக் கல்வி மூலம் படித்துக் கொண்டு சிஏ படிக்க அனுமதிக்கப் படுகிறது. கல்லூரியில் ஏதாவது பட்டப் படிப்பைப் படித்துக்கொண்டே காஸ்ட் அக்கவுண்டிங் மற்றும் கம்பெனி செக்ரட்டரிஷிப் படிப்புகளைப் படிக்க முடியும்.

உயர்கல்வி படிப்பதற்கான துறைகள் ஏராளம். பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்னதாகவே, எதிர்காலப் படிப்பு குறித்து பிளஸ் டூ மாணவர்கள் திட்டமிட்டு, அதற்கான செயலில் களம் இறங்க வேண்டும். மருத்துவமும், பொறியியலும்தான் உயர்ந்த படிப்பு என நினைக்காதீர்கள். படிப்புகளில் உயர்ந்தது, தாழ்ந்தது என்று எதுவும் கிடையாது. எந்தப் படிப்பைப் படித்தாலும் சிறப்பாகப் படிக்கின்ற மாணவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. பல்வேறு துறைகளில் சிறப்பாகப் படித்த மாணவர்கள் நல்ல ஊதியத்தில், நல்ல வேலையை எட்டிப் பிடித்திருக்கிறார்கள். எனவே, மாணவர்களுக்கு எந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறதோ, அந்தத் துறையில் நல்ல கல்வி நிறுவனங்களில் சேர்த்து விடுங்கள். எந்தப் படிப்பைப் படித்தாலும் திறமையான எதிர்காலம் காத்திருக்கிறது. விடாமுயற்சியும் கடின உழைப்பும்தான் வெற்றிக்கு வழிகாட்டி.

இலவச கம்ப்யூட்டர் பயிற்சி

பாரதீய வித்யா பவன் சார்பில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் இதில் பங்கு பெறலாம். இந்த நிறுவனத்தின் காந்தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்ப்யூட்டர் எஜுகேஷன் அண்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி மையங்கள் அமைந்துள்ள மயிலாப்பூர், தி.நகர் மையங்களில் இந்தப் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

படித்த, வேலையில்லாத, பொருளாதார ரீதியில் பின் தங்கிய நிலையில் உள்ள இளைஞர்களுக்காக இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. மூத்த குடிமக்களும் இப்பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். மயிலாப்பூரில் கிழக்கு மாட வீதியிலும், தி.நகரில் தணிகாசலம் வீதியிலும் இந்த மையங்கள் அமைந்துள்ளன. வாரத்துக்கு மூன்று நாட்கள் வீதம் மூன்று மாதங்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.04.2014.  

விவரங்களுக்கு: 044-24643450, 044-24643420

Tuesday, April 22, 2014

கல்லூரி பேராசிரியர் பணிக்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மே 5 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்லூரி பேராசிரியர் பணிக்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மே 5 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்லூரி பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கும், இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெறுவதற்குமான -நெட்- தேர்வை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தி வருகிறது.
இந்தத் தேர்வில் தகுதி பெறுபவர்கள், நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் ம...
See More
2. . Submit the Application Form, Attendance Slip and Bank Challan along with relivent documents at the respective Coordinating University/college (opted by the candidate).
UGCNETONLINE.IN

ECHS-ல் மருந்தாளுநர் பணி

Ex-Servicemen Contributory Health Scheme (ECHS)முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதார திட்டத்தின் கீழ் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள மருத்துவ அதிகாரி மற்றும் மருத்துவம் சார்ந்த பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள் குறித்த விவரங்கள்:
Ranchi
Medical officer - 02
Lab Technician – 02
Physiotherapist – 01
Pharmacist - 01
Dental Hygienist - 01
Chowkidar – 01

Daltonganj
Lab Technician – 01
Pharmacist - 01
Dental Hygienist - 01
Chowkidar - 01

Chaibassa
Medical officer – 01
Pharmacist - 01
Nursing Assistant - 01
Dental Hygienist - 01
Chowkidar - 01

Gumla
OIC Polyclinic – 01
Pharmacist – 01
Dental Hygienist – 01
Chowkidar - 01

Jamshedpur
Medical Officer – 01
Lab Technician – 01
Pharmacist – 01
Dental Hygienist - 01
Chowkidar – 01

Deoghar
OIC Polyclinic - 01 (retired defence officer)
Medical Officer - 01
harmacist – 01
Dental Hygienist – 01
Chowkidar – 01. Retd JCO can also apply in lieu of OIC as Adm JCO.

Dhanbad
Lab Technician - 01
Pharmacist – 01
Dental Hygienist – 01
Chowkidar - 01
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.04.2014
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, கல்வித்தகுதி, நேர்முகத் தேர்வு மையங்கள் மற்றும் தேதிகள் அறிய www.echs.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.