Saturday, October 4, 2014

இரும்பு உற்பத்தியில் முன்னிலை வகித்து வரும் செயில் நிறுவனத்தின் IISCO ஸ்டீல் ஆலையில் காலியாக 89 Junior, Dy, and Assistant Manager பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 89
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Jr. Manager (Safety) - 13
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
2. Dy. Managers Grade : E3 - 73
வயதுவரம்பு: ரூ.32,900 - 58,000
சம்பளம்: மாதம் ரூ.32,900 - 58,000
3. Assistant Managers (CCP-Oprn) Grade-E2 - 03
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500
வயதுவரம்பு: 34க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்து தொழில்துறை பாதுகாப்பு பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.500. SC,ST,PWD பிரிவினர் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணைளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பித்த பிறது அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Office of DGM (Personnel-CF),
SAIL-IISCO Steel Plant,
7 The Ridge, Burnpur-713325,
Dt: Burdwan, West Bengal
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 17.10.2014
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.11.2014
மேலும் விண்ணப்பத்தாரர்களின் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய http://sailcareers.com/pdf/Advertisement%20for%20Executive%20positions-2014-15-Current%20Detailed.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
இந்திய கப்பல் படையில் பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ள திருமணம் ஆகாத ஆண்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிப் பிரிவுகள்:
1.Naval Armament Inspections Cadre of Executive Branch
வயதுவரம்பு: 19 1/2 - 25க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.07.1990 - 01.01.1996க்கும் இடையில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
தகுதி: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் பிரிவில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அள்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். அல்லது எலக்ட்ரானிக்ஸ், இயற்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
2. Education Branch.
வயதுவரம்பு: 21 - 25க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.07.1990 - 01.07.1994க்கும் இடையில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
தகுதி: கணிதத்துறையில் இளங்கலை பட்டமும் இயற்பியலில் முதுகலை பட்டம் பெற்றிக்க வேண்டும். அல்லது இயற்பியலில் இளங்கலையும் கணிதத்தில் முதுகலையும் முடித்திருக்க வேண்டும். அல்லது எம்.ஏ ஆங்கிலம் அல்லது எம்.எஸ்சி வேதியியல் அல்லது எம்சிஏ முடித்திருக்க வேண்டும். அல்லது எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், டெலிகம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் போன்ற ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ, பி.டெக், எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.nausena-bharti.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். பிறகு அதனை 2 பிரிண்ட் அவுட் எடுத்து அதில் ஒன்றை தேவையான சான்றிதழ்கள் நகல்கள் (சுயசான்று செய்யப்பட்ட) இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப நகல் சென்று சேர கடைசி தேதி: 04.11.2014
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.10.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Post Box No.04, RK Puram Main PO, New Delhi - 110066.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nausena-bharti.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் RailTel Corporation of India நிறுவனத்தில் நடைபெறவுள்ள National Optic Fiber Network திட்ட பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: RCIL/2014/P&A/44/37 (i) WR
பணி: Field Supervisor
காலியிடங்கள்: 50
தகுதி: எலக்ட்ரானிக்ஸ் அல்லது டெலி கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன் அல்லது எலக்ட்ரிக்கல் அல்லது எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேசன் பிரிவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்து 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி கால அளவு: 2 வருடங்கள் அல்லது திட்டப்பணி முடியும்வரை நீட்டிக்கப்படலாம்.
சம்பளம்: மாதம் ரூ.20,000 மற்றும்இதர படிகள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.200. SC/ST பிரிவினருக்கு ரூ.100. இதனை RailTel Corporation of India Limited என்ற பெயரில் புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு பணியில் சேரும் முன்பு மருத்துவ தகுதித் தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.railtelindia.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.10.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: SR.Manager(P&A), RailTel Corporation Of India, Building No.143, Sector-44, Gurgaon-122003.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.railtelindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.