Friday, May 16, 2014

பட்டதாரிகளுக்கு நிலத்தியல் ஆய்வு துறையில் நிர்வாக அதிகாரி பணி

மத்திய சுரங்கத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நிலத்தியல் ஆய்வு அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள நிர்வாக அதிகாரிகள் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று சம்பந்தப்பட்ட துறையில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பெர்சனல் மேனேஜ்மென்ட் அல்லது சட்டத்துறையில் பட்டம் பெற்றிருந்தால் விரும்பத்தக்கது.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.25. இதனை பாரத ஸ்டேட் வங்கியில் ரெக்கமாகவோ அல்லது நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.upsconline.nic.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.05.2014.

No comments:

Post a Comment