Saturday, May 31, 2014

ஜூன் 1-இல் அஞ்சல் துறை பல்செயல்பாட்டு பணியிடங்களுக்கான தேர்வு

அஞ்சல் துறையின் பல்செயல்பாட்டு பணியிடங்களுக்கான தேர்வு ஜூன் 1-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான நுழைவுச் சீட்டு துரித அஞ்சல் மூலம் அனுப்பப்படும் என தமிழக அஞ்சல் வட்டம் தெரிவித்துள்ளது.
 தமிழக வட்ட தலைமை அஞ்சல் துறை பல்செயல்பாட்டு ஊழியர்களை நியமிக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்கெனவே பெறப்பட்டன.
 இந்த நிலையில், ஜூன் 1-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை தேர்வு நடைபெறும் என அஞ்சல் துறை அறிவித்துள்ளது. ஆகையால், இந்தத் தேர்வுகான நுழைவுச் சீட்டுகள்  தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு துரித அஞ்சல் (ஸ்பீட் போஸ்ட்) மூலம் அனுப்பப்பட உள்ளன.
 தகுதியுள்ள விண்ணப்பங்கள் மற்றும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் ஆகியவற்றின் நிலை குறித்த தகவல்கள் தமிழ்நாடு அஞ்சல் துறையின் இணையதளத்தில் www.tamilnadupost.nic.in வெளியிடப்பட்டுள்ளன.
 மேலும், இந்த விவரங்கள் அந்தந்த மண்டலங்கள் மற்றும் பிரிவு அலுவலகங்களிலும் வெளியிடப்பட்டுள்ளன என்று தமிழக வட்ட தலைமை பொது அஞ்சல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட காலியிடங்கள் 1,291-ஆக அதிகரிப்பு

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 1,291-ஆக அதிகரித்துள்ளது.
 இதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
 கடந்த ஆண்டு 1,080 காலிப்பணியிடங்களுக்காக தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 210 இடங்கள் அதிகரித்துள்ளன.
 கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவாக மிக அதிக எண்ணிக்கையிலான பணியிடங்களுக்கு இந்த ஆண்டு தேர்வுகள் நடைபெற உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. அதேபோல், பல்வேறு சேவைகளில் புதிய பணியிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளதால் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்: யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஜூன் 30-ஆம் தேதி நள்ளிரவு வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு www.upsconline.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 20 வகையான  பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் 24-ஆம் தேதி நடைபெற உள்ளது.
 கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட 1,080 காலிப் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஏப்ரலில் நடத்தியது. இந்தத் தேர்வு முடிவுகள் அடுத்த வாரம் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் லேப்டெக்னீசியன் பணி

கர்நாடக மாநிலம் பெங்களூரில் செயல்பட்டு வரும் காசநோய் ஆராய்ச்சி மையத்தில் லேப்டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Lab Technicians.
காலியிடம்: 06
சம்பளம்: ரூ.25,000
கல்வித்தகுதி: Microbiology/Medical Laboratory Technology பாடங்களில் M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும். M.Sc Medical Lab Technology பட்டம் பெற்றவர்கள் DMLT முடித்து 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Laboratory Technicians
காலியிடம்: 02
சம்பளம்: ரூ.18,000
கல்வித்தகுதி: Microbiology பாடத்தில்
B.Sc பட்டம் அல்லது B.Sc Medical Lab Technology படிப்புடன் DMLT படித்திருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Accountant
காலியிடம்: 01
சம்பளம்: மாதம் ரூ.20,000
கல்வித்தகுதி: M.com பட்டப்படிப்புடன் Tally படித்திருக்க வேண்டும். CA பதிவு பெற்றவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.
பணி: Data Analyst
காலியிடம்: 01
சம்பளம்: மாதம் ரூ.20,000
கல்வித்தகுதி: கணினி அறிவியல், கணிதம், புள்ளியியல் துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். M.S.Office படிப்புடன் கம்ப்யூட்டரில் பணிபுரிய தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ntiinia.kar.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
THE DiRECTOR,
NATIONAL TUBERCULOSIS IMSTITUTE, No.8, BELLARY ROAD, BANGALORE - 560003.
E-mailnti@ntiindia.org.in
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.04.2014

Friday, May 30, 2014

பாரத ஸ்டேட் வங்கியில் 5,092 பணியிடங்கள்பாரத ஸ்டேட் வங்கியில் 5,092 பணியிடங்கள்

பாரத ஸ்டேட் வங்கியில் நாடு முழுவது முள்ள 5 ஆயிரத்து 92 எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வந்திருக்கிறது. இதற்கான தேர்வு ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நடக்கவிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 373 காலிப்பணியிடங்கள் இந்தத் தேர்வு மூலம் நிரப்பப்படும். இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை நிரப்ப றறற.ளbi.உடி.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 26 ஆம் தேதியன்றே நிரப்புவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டு விட்டது. ஜூன் மாதம் 14 ஆம் தேதி விண்ணப்பங்களை நிரப்புவதற்கான கடைசித் தேதியாகும்.

18 வயதை நிரம்பியவர்கள் விண்ணப் பத்தை நிரப்பலாம். பொதுவாக, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு என் றிருந்த நிலையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு, பட்டப்படிப்பில் கடைசி ஆண்டில் இருப்பவ ரும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட் டிருக்கிறது. பொதுப்பிரிவில் உள்ளவர்களுக்கான வயது வரம்பு 18 வயது முதல் 28 வயது வரை என்றும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 18 முதல் 31 வரை என்றும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 18 முதல் 33 வரை என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர் தேர்வுக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பொதுப்பிரிவினர் மற்றும் இதர பிற்படுததப்பட்ட பிரிவினருக்கு ரூ. 450 என்று தேர்வுக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

Sunday, May 25, 2014

விமான நிலைய ஆணையத்தில் உதவியாளர் பணி

புதுதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் வடமாநில மண்டல அலுவலகத்தில் காலியாக உள்ள சீனியர் அசிஸ்டென்ட் (எலக்ட்ரானிக்ஸ்) பணிகளுக்கு தகுதியான விருப்பமும் உள்ள பிற்ப்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் பிரிவினடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: சீனியர் அசிஸ்டென்ட் (எலக்ட்ரானிக்ஸ்)
காலியிடங்கள்: 10 (sc - 08, OBC - 02)
சம்பளம்: மாதம் ரூ.14,500 - 33,500.
கல்வித்தகுதி: எலக்ட்ரானிக்ஸ்/ டெலி கம்யூனிகேசன்/ ரேடியோ இன்ஜினியரிங் போன்ற துறைகளில் ஏதாவதொரு துறையில்  3 ஆண்டு டிப்ளமோ முடித்து 3 அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30.04.2014 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.400. இதனை Airports Authority of India என்ற பெயருக்கு புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் பிரிவினர் மற்றும் பெண்கள் எந்தவிதமான கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.airportsindia.org.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Regional Executive Director (NR),
Airports Authority of India,
Regional Headquarters, Northern Region,
Operatiional Offices,
Gurgaon Road,
NEWDELHI 110 037.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.05.2014.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய மேற்கண்ட இணையதளத்தைப் பார்க்கவும்.

வடக்கு தில்லி மாநகராட்சி பள்ளியில் உதவியாளர் பணி

வடக்கு தில்லி மாநகராட்சியின் கல்வி துறையில் காலியாக உள்ள 365 School Attendant, Nursery Aaya பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 365
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. School Attendant - 270
02. Nursery Aaya - 95
வயது வரம்பு : 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.mcdonline.gov,inஎன்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்க செய்து தெளிவாக பூர்த்தி தேவையான சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

பிசிஎம்சில் பல்வேறு பணி

மகாராஷ்டிரா மாநிலம் பிம்ப்ரி சின்ச்வால் முனிசிபல் கார்ப்பரேஷனில் (பிசிஎம்சி) காலியாக உள்ள Houseman, Registrar, Nephrologist மற்றும் Data Entry operator பணியிடங்களை நேர்முகத் தேர்வுகள் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 27.05.2014 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மொத்த காலியிடங்கள்: 109
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. Houseman - 73
02. Registrar - 21
03. Nephrologist - 01
04. Data Entry operator - 14
கல்வித் தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்:
Houseman பணிக்கு மாதம் ரூ. 35000 - 40,000 - 54,000
2. Registrar பணிக்கு மாதம் ரூ.40,000 - 54,000
3. Nephrologist பணிக்கு ரூ.70,000.
4. Data Entry operator பணிக்கு ரூ.10,000
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின்  அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களைப் பற்றிய முழுவிவரம் அடங்கிய Resume மற்றும் தேவையான சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
நேர்காணல் நடைபெறும் தேதி: 27.05.2014
விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய
Pimpri Chinchwad Municipal Corporation
-Mumbai-Pune Road,
-Pimpri, Pune-411018,
-Maharashtra, INDIA
-Phone: 91-020-27425511/12/13/14
-Fax: 91-020-27425600 / 67330000
-E-mail: pcmc@vsnl.com/egov@pcmcindia.gov.in
மேலும் கல்வித் தகுதிகள், தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்களுக்கு  http://www.pcmcindia.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

இந்திய கடலோர காவல் படையில் உதவி கமாண்டன்ட் பணி

இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள உதவி கமாண்டன்ட் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Commandant
01. General Duty
02. General Duty (Pilot)
03. Commercial Pilot License-SSA
04. General Duty (Women-SSA)
05. Technical (Electrical/ Electronics)
06. General Duty (Navigator/ Observer)
07. Technical (Mechanical/ Aeronautical)
கல்வித் தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணிவாரியான கல்வித்தகுதிக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் ரூ. 5400
விண்ணப்பிக்கும் முறை: www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.06.2014
மேலும் வயது வரம்பு, முழுமையான கல்வித்தகுதி, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறியwww.joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாதுகாப்புத் துறையில் பணி

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் Central AFV துறையில் நிரப்பப்படவுள்ள Mazdoor மற்றும் Messenger பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 06
பணிவாரியான காலியிடங்கள் விவரம்:
01. Mazdoor - 05
02. Messenger - 01
வயது வரம்பு: 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.1800
தேர்வு செய்யப்படும் முறை: உடல்திறன் தேர்வு, எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10202_18_1415b.pdf இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழகளின் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று “APPLICATION FOR THE POST OF MAZDOOR/ MESSENGER AND CATEGORY UR/ OBC/ ESM” குறிப்பிட்டு சாதாரண அஞ்சலில்   விளம்பரம் வெளியிடப்பட்ட தேதியில் இருந்து 21 நாட்களுக்குள் வந்து சேர வேண்டும் .
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Commandant Central AFV Depot,
Kirkee , Pune -411003,
Pin Code - 908798
C/o 56 APO,
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10202_18_1415b.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

NIRJAFT நிறுவனத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணி

நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ரிசர்ச் ஆன் ஜூட் அளைடு ஃபைபர் டெக்னாலஜியில் காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டெக்னிக்கல் உதவியாளர்
கல்வித்தகுதி: அக்ரிகல்ச்சுரல், டெக்ஸ்டைல், ஃபைபர் டெக்னாலஜி, மெக்கானிக்கல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் அல்லது அக்ரிகல்ச்சுரல், வேதியியல், இயற்பியல், எலக்ட்ரானிக்ஸ் துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.06.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய என்ற www.nirjaft.res.in இணையதளத்தைப் பார்க்கவும்.

நிட்டி நிறுவனத்தில் பொறியாளர் பணி

நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்டஸ்ட்ரீயல் இன்ஜினீயரிங் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை பெறாறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: இளநிலை பொறியாளர்
கல்வித்தகுதி: சிவில், எலக்ட்ரிக்கல் போன்ற ஏதாவதொரு துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.05.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nitie.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

மேற்கு வங்க சுகாதார துறையில் பல்வேறு பணி

மேற்கு வங்க அரசின் சுகாதார துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை துறை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 2315
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. General Duty Medical Officer - 1492
2. Block Medical Officer of Health - 117
3. Medical Officer (Specialists):
i. General Medicine - 114
ii. General Surgery - 112
iii. Gynae & Obs - 150
iv. Anaesthesia - 96
v. Ophthamology - 20
vi. Otorhinoloaryngology - 20
vii. Dermatology - 15
viii. Microbiology/ Pathology - 15
ix. Paediatric Medicine - 90
x. Orthopaedic Surgery - 30
xi. Radiodiagnosis - 22
xii. Psychiatry - 10
xiii. Medico-legal - 12
வயது வரம்பு: இளங்கலை பட்டதாரிகள் 32-க்குள் இருக்க வேண்டும். முதுகலை பட்டதாரிகளுக்கு 40-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.210. SC/ST/PWD பிரிவினர் எந்தவிதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: WBHRB இணையதளமான www.wbhrb.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.06.2014
பூர்த்தி செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 25.06.2014
மேலும் விரிவான கல்வித்தகுதி, தேர்வு விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.wbhrb.in என்றஇணையதளத்தைப் பார்க்கவும்.

பி.இ பட்டதாரிகளுக்கு BEL நிறுவனத்தில் பணி

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் இந்திய அளவில் காலியாக உள்ள 200 பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 200
பணி: Probationary Engineer
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Electronics - 100
2. Mechanical - 75
3. Computer Science - 20
4. Civil - 03
5. Electrical - 02
கல்வி தகுதி: விண்ணப்பத்தாரர்கள் முதல் வகுப்பில் BE / B.Tech / B.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.05.2014 தேதியின்படி 25-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 3 % - ரூ . 40,500
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.500. SC/ST/PWD பிரிவினர் எந்தவிதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.bel -india.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.06.20144
எழுத்து தேர்வு நடைபெறும் தேதி: 06.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bel -india.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

முஸ்லிம் செவிலியர்கள் சவூதி அரேபிய பணி வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்

சவூதி அரேபியாவில் பணியாற்ற விருப்பம் மற்றும் தகுதிக் கொண்ட முஸ்லிம் செவிலியர்கள் விண்ணப்பிக்குமாறு நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக செய்திக் குறிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சவூதி அரேபிய சுகாதார அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற பி.எஸ்.சி தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட 30 வயதுக்குள்பட்ட முஸ்லிம் பெண் செலிவியர்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்குப் பணி அனுபவத்துக்கேற்ப ஊதியத்துடன் இலவச விமான டிக்கெட், இலவச இருப்பிடம் மற்றும் இதர சலுகைகள் வேலையளிப்பவர்களால் வழங்கப்படும்.
பணிக்கான நேர்முகத் தேர்வு மே 24 மற்றும் மே 25 ஆகிய தேதிகளில் ஹைதராபாத்திலும், மே 27 முதல் மே 29-ம் தேதி வரை கொச்சியிலும் நடைபெறுகிறது.
இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியும் கொண்டவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்விச் சான்று, அனுபவச் சான்று ஆகியவற்றுடன் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை இணைத்து, எண்.42, ஆலந்தூர் சாலை, ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகம், திருவிக தொழில்பேட்டை, கிண்டி, சென்னை-32 என்ற முகவரியில் இயங்கும் தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம்.
அல்லது ovemclsn000gmail.com  என்ற ஈமெயில் முகவரிக்கு மேற்குறிப்பிட்ட சான்றுகளை அனுப்பி உடனடியாக விண்ணப்பிக்குமாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

+2, பட்டதாரிகளுக்கு சத்தீஸ்கரில் அரசு பணி

சத்தீஸ்கர் மாநில அரசில் நிரப்பப்பட உள்ள DEO, Steno Typist, Asst Programmer, Admin, Accounts Asst, District Social Audit, Data Entry Facilitator போன்ற 157 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 157
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Consultant - 01
2. Management (Administration)- 01
3. Dy. Management (Administration)- 01
4. Administration Assistant - 02
5. Manager (Finance)- 01
6. Accounts Assistant - 02
7. Information technology - 01
8. Assistant Programmer - 01
9. Assistant Training Coordinator - 01
10. Divisional Managing Social Audit - 05
11. Data Entry Operator - 02
12. Steno Typist - 01
13. District Social Audit Facilitator - 88
14. Data Entry Facilitator - 50
வயது வரம்பு:
1 கணக்கு உதவியாளர் பணிக்கு 18 முதல் 35-க்குள்  இருக்க வேண்டும் .
பணி எண் 13,14-க்கு 20 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.
மீதமுள்ள அனைத்து பணிகளுக்கும் 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி :
District Social Audit Facilitator பணிக்கு சமூக அறிவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Data entry Facilitator பணிக்கு +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
DEO பணிக்கு +2 முத்து  கணினி பயன்பாடுகள் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
Accounts Assistant பணிக்கு பி.காம் அல்லது எம்.காம் முடித்திருக்க வேண்டும்.
Administration Assistant பணிக்கு மேலாண்மை அல்லது நிர்வாகம் தொடர்பான துறையில் அளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதி, பணி அனுபவம் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.06.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு குறித்த முழுமையான விவரங்கள் அறிய என்ற http://www.cgstate.gov.in இணையதளத்தைப் பார்க்கவும்.

சிந்துதுர்க் ஆட்சியர் அலுவலகத்தில் கிளார்க் பணி

மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள Clerk-Typist மற்றும் Talathi போன்ற 71 பணியிடங்களை நிரப்புவதற்கான மகாராஷ்டிரா மாநிலம் அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 71
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. Clerk-Typist - 51
02. Talathi - 20
வயது வரம்பு: 16.05.2014 தேதியின்படி 18 முதல் 33-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
01. Clerk-Typist பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகளும், மராத்தியில் 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
02. Talathi பணிக்கு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மராத்தி மொழி தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு / திரையிடல் சோதனை, ஆங்கிலம் தட்டச்சு தேர்வு, சோதனை, Viva-voce மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.300, மற்ற பிரிவினருக்கு ரூ.200.
சம்பளம் :
01. Clerk-Typist பணிக்கு மாதம் ரூ 5200 . 20,200 + தர ஊதியம் ரூ.1900
02. Talathi பணிக்கு மாதம் ரூ. 5200 . 20,200 + தர ஊதியம் ரூ.2400.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.sindhudurg.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.05.2014
எழுத்தர் தட்டச்சர் பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 08.06.2014 அன்று காலை 11 முதல் 12.30 வரை.
Talathi பணிக்கான எழுத்து தேர்வு நடைபெறும் தேதி: 22.06.2014 காலை 11 மணி முதல் 12.30 மணி வரை.
மேலும் விண்ணப்பதார்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு www.sindhudurg.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

பார ஸ்டேட் வங்கியில் கிளார்க் பணி

பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள 5199 Assistant in Clerical Cadre பணியிடங்களை நிரப்புவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ADVERTISEMENT NO. CRPD/CR/2014-15/02
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 5199
பணி: Assistants in Clerical Cadre
கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 01.05.2014 தேதியின்படி 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.05.1986 - 01.05.1994 க்கும் இடைப்பட்ட தேதிகளில் பிறந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் ரூ 7,200 . 19.300.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி.பிரிவினருக்கு ரூ. 450. SC, ST,PWD முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.06.2014
ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 14.06.2014.
ஆஃப் லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 17.06.2014
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sbi.co.in அல்லது www.statebankofindia.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் பணி

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரெப்கோ வங்கியின் துணை நிறுவனமான ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் எர்ணாகுளம் கிளையில் காலியாக உள்ள கிராஜூவேட் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கும் முறை: http://www.repcohome.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Mr Jose Paul, Branch Manager,
Repco Home Finance Ltd, No 41/ 4057 A,
Chalakkel house Ground Floor,
Old Railway Station Road, Kochi 682018
Email: ekm@repcohome.com
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.06.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.repcohome.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Saturday, May 24, 2014

செப்டம்பரில் கிராம வங்கித் தேர்வு

ஒவ்வொரு ஆண்டும் கிராம வங்கி ஊழியர்களின் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடைபெறுகிறது. தற்போது ஐ.பி.பி.எஸ் (IPPS) என்ற அமைப்பிடம் தேர்வு நடத்துவதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிராம வங்கிகளைப் பொறுத்தவரை, நேர்முகத் தேர்வினை அந்தந்த கிராம வங்கிகளே நடத்திக் கொள்கின்றன.நடப்பாண்டில் எழுத்துத் தேர்வு நடக்கும் உத்தேச தேதிகளை ஐ.பி.பி.எஸ் வெளியிட்டிருக்கிறது. செப்டம்பர் மாதத்தில் 6,7, 13, 14, 20, 21 மற்றும் 27 ஆகிய தேதிகளில் இந்தத் தேர்வு நடக்கும். தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து இது அதிகரிக்கவோ அல்லது குறையவோ செய்யும்.மற்ற மாநிலங்களில், ஆட்களை நிரப்பும் பணி துரிதமாக நடைபெறுகிறது.

தமிழகத்தில் இரண்டு கிராம வங்கிகள் உள்ளன. வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் பல்லவன் கிராம வங்கியின் கிளைகள் உள்ளன. தெற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் பாண்டியன் கிராம வங்கியின் கிளைகள் உள்ளன.கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி, அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பணியிடங்களை பல்லவன் கிராம வங்கி நிரப்பியுள்ளது. ஆனால், பாண்டியன் கிராம வங்கியைப் பொறுத்தவரை, தற்போதுதான் அதிகாரிகளின் பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வை நிறைவு செய்துள்ளது.தெற்கு மாவட்டங்களிலிருந்து ஏராளமானவர்கள் ஊழியர்களுக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று, பாண்டியன் கிராம வங்கி விரைவில் பணியிட நிரப்புதலுக்கான அறிவிக்கையை வெளியிடும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்குள் அடுத்த எழுத்துத் தேர்வே வந்துவிட்டது.

ரயில்வே தேர்வுக்குவிண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு...

சில மாதங்களுக்கு முன்பாக ரயில்வே துறையில் 26 ஆயிரத்து 570 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியானது. லட்சக்கணக்கானவர்கள் அதற்கு விண்ணப்பமும் செய்திருக்கிறார்கள். இந்நிலையில் இதற்கான எழுத்துத் தேர்வு ஜூன் மாதம் 15 ஆம் தேதியன்று நடக்கவிருக்கிறது.பொது அறிவுத்தாளில் அறிவியல் கேள்விகள் அதிகமாகக் கேட்கப்பட்டு வருகிறது. அதனால், இந்தத் தேர்வை எழுதப் போகிறவர்கள் பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களிலிருந்து அறிவியல் கேள்விகளைப் படித்துக் கொள்ள உதவும்.சொல்லப்போனால், வி.ஏ.ஓ. தேர்வு 14 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. பொது அறிவுத்தாளுக்கான தயாரிப்பு, இதற்கும் பெரிய அளவில் உதவியாகவே அமையும்.

தபால்துறைத் தேர்வு

தபால்துறையில் Multi tasking staffபணிக்கு விண்ணப்பித்திருந்தவர்கள் ஹால் டிக்கெட் வந்துவிட்டதா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ஜூன் 1 ஆம் தேதியன்று தேர்வு நடைபெறவுள்ளது. பத்தாம் வகுப்புக்கு உள்ள பாடங்களில் இருந்துதான் பொது அறிவுக்கேள்விகள் வரும். குறிப்பாக, அறிவியல் பாடங்களை ஒரு முறை நன்றாக வாசித்துக் கொள்வது நல்லது.

Saturday, May 17, 2014

வேதியியல் பட்டதாரிகளுக்கு ஆராய்ச்சிப் பணி

சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் CSIR Madras Complex ஆராயாச்சி நிலைத்தில் காலியாக உள்ள ஆராய்ச்சி பணியிடங்கள் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.
பணி: Research Intern
காலியிடங்கள்: 04
கல்வித்தகுதி: Mineral Engineering, Mineral Processing துறையில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது Inorganic Chemistry/Analytical Chemistry/Physical Chemictry/Industrial Chemistry துறையில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,000
வயதுவரம்பு: 04.06.2014 தேதியின்படி 25-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: CSIR Madras Complex, CSIR Campus, TTTI Taramani-P.o., Chennai - 600113.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 04.06.2014 அன்று காலை 10 மணி
மேலும் விண்ணப்பத்தாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு www.csircnc.res.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

கோவை ஆவின் நிறுவனத்தில் துணை மேலாளர் பணி

தமிழக அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனத்தின் கோயம்புத்தூர் கிளையில் காலியாக உள்ள துணை மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: துணை மேலாளர் (பால் பண்ணை) - Deputy Manager (Dairying)
மொத்த காலியிடங்கள்: 07
வயது வரம்பு: எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35 வயதிற்குள்ளும், எம்பிசி, பிசி பிரிவினர் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
கல்வி தகுதி: பால் பண்ணை துறையில் பட்டம் அல்லது பால் வளர்ப்பு/ பால் பண்ணை தொழில்நுட்பம்/ உணவு தொழில்நுட்ப அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager, Coimbatore District Co-operative Milk Producers' Union Ltd., Pachapalayam, Kalampalayam (post),Coimbatore-641010
மேலும் விவரங்கள் அறியவதற்கான தொலைபேசி எண்: 0422-2208011, 2607971
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.05.2014

Friday, May 16, 2014

மே 17-ல் சென்னையில் பட்டதாரி மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்

இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்பை முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு நாள் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநிலக் கல்லூரியில் சனிக்கிழமை (மே 17) நடைபெற உள்ளது.
பார்வை குறைபாடுள்ள இளைஞர்களால் நடத்தப்படும் -சென்னை ரோட்ராக்ட் கிளப் ஆஃப் திருஷ்டி- அமைப்பும், -எல்.சி. நாகப்பட்டினம்- எனும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான அமைப்பும் இணைந்து இந்த வேலைவாய்ப்பு பயிற்சி முகாமை நடத்துகின்றன.
மாநிலக் கல்லூரியில் உள்ள பவல் அரங்கில் காலை 9.30லிருந்து மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த பயிலரங்குக்கு அனுமதி இலவசமாகும்.
இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம், வங்கி, காப்பீடு, நிதி நிறுவனங்கள், சில்லறை வர்த்தகம், உபசரிப்பு உள்ளிட்ட சேவை நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான பயிற்சிகள் வழங்கப்படும்.
விருப்பமுள்ள மாணவர்கள் பயிற்சி ஒருங்கிணைப்பாளர்களை மே 15-ஆம் தேதிக்குள் செல்பேசி மூலமோ அல்லது மின் அஞ்சல் மூலமோ தொடர்புகொண்டு பெயர்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
தொடர்புக்கு:
பேராசிரியர் கே. ரகுராமன்  - 9840018012,  rcdrishti@gmail.com
எஸ். அஷோக்  குமார் ,  9842919357,  lcprojectnp@gmail.com,
மாரிமுத்து,  9840915796,  marimuthushanmugam14@gmail.com

ஐடிஐ முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் பணி

இந்திய அஞ்சல் துறையின் Office of the Senior Manager, Mail Motor Service, c-121, NIA Phase-I, Naraina, New Delhi-110028 கிளையில் நிரப்பப்பட உள்ள M.V Mechanic, M.V.Electrician, Carpenter மற்றும் Turner பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
01. M.V Mechanic - 04
02. M.V Electrician - 01
03. Carpenter (Skilled) - 01
04. Turner (Skilled) - 01
வயதுவரம்பு: 01.07.2014 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தரஊதியம் ரூ.1900
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்து அதே துறையில் ஒரு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_06334_1_1415b.pdf கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப மாதிரியை பயன்படு விண்ணப்பம் தயார்செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சலில் மட்டும் அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
office (Department of Posts,
Office of the Senior Manager,
Mail Motor Service, c-121, NIA Phase-I,
Naraina, New Delhi-110028
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_06334_1_1415b.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.06.2014

+2 முடித்தவர்களுக்கு விமான பைலட் பயிற்சி

மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் கீழ் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் செயல்பட்டு வரும் இந்திராகாந்தி ராஷ்ட்டிரிய யுரான் அகாடமியில் சேர பைலட் பயிற்சியில் சேர 17 வயது பூர்த்தியான பிளஸ் 2 முடித்தவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த இடங்கள்: 150 இதில் பொதுபிரிவினருக்கு - 75 இடங்களும், எஸ்சி பிரிவினருக்கு - 23 இடங்களும், எஸ்டி பிரிவினருக்கு - 11 இடங்களும். ஒபிசி பிரிவனருக்கு - 41 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
வயதுவரம்பு: 17 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சி கட்டணம்: மொத்தம் ரூ.32 லட்சத்து 50 ஆயிரம். இததை 4 தவணைகளில் செலுத்தலாம். (3 மாதங்களுக்கு ஒரு முறை செலுத்த வேண்டும்).
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைனில் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, பைலட் தகுதித்தேர்வு அல்லது சைக்கோ மெட்ரிக் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில்  தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பபடுவார்கள். இருபாலாருக்கும் தனி தனியான விடுதி வசதி உண்டு.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஒபிசி பிரிவினருக்கு ரூ.6.000. (எஸ்சி., எஸ்டியினருக்கு பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை)  கட்டணத்தை ஏதேனும் ஒரு பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் ரொக்கமாக செலுத்தலாம் அல்லது நெட் பேங்கிங் மூலமோ, கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலமோ செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.igrua.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 01.06.2014.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.05.2014.
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு www.igrua.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

பார்மசிஸ்ட் முடித்தவர்களுக்கு மருந்து கிடங்குகளில் பணி

மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மருத்துவ சேவைகள் சங்கம் மத்திய, மாநில அரசு மருத்துவமனைகளுக்கு கொள்முதல் செய்த மருந்துகளை வழங்கி வரும் 21 மருந்து கிட்டங்குகளில் காலியாக உள்ள பார்மசிஸ்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பார்மசிஸ்ட்:
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
கல்வித் தகுதி: மாநில அரசின் மருத்துவத் துறையில் குறைந்தது 10 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் அல்லது மாநில அரசின் மருத்துவத்துறையில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பார்மசிஸ்ட்டாக பணியாற்றியிருக்க வேண்டும்.
பணி: ஜூனியர் பார்மசிஸ்ட்:
வயதுவரம்பு: 25 - 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.20,000 வழங்கப்படும். சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும.
பணி: டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்
வயதுவரம்பு: 24 - 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும்.
குறிப்பு: மேற்கண்டஜூனியர் பார்மசிஸ்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் இரு பணிகளும் ஒப்பந்த அடிப்படையிலானவை. விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் உள்ளூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.mohfw.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.05.2014.

பொருளியல் முதுகலை பட்டதாரிகளுக்கு உதவி இயக்குநர் பணி

மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழில் மேம்பாட்டு ஆணைய அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள பொருளியல் ஆய்வு உதவி இயக்குநர்கள் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 29
பணி: பொருளியல் ஆய்வு உதவி இயக்குநர்
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பொருளியல் துறையில் முதுகலை பட்டம் மற்றும் பொருளாதார ஆய்வில் 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.25. இதனை பாரத ஸ்டேட் வங்கியில் ரெக்கமாகவோ அல்லது நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.upsconline.nic.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.