Sunday, August 10, 2014

அபுதாபியில் உள்ள முன்னணி நிறுவனத்தில் பணிபுரிய ஐ.டி.ஐ. படிப்புடன் பணி அனுபவம் பெற்றவர்கள் அதிக எண்ணிக்கையில் தேவைப்படுவதாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:
அபுதாபியில் உள்ள ஓர் முன்னணி நிறுவனத்திற்கு ஐ.டி.ஐ. தேர்ச்சியுடன் 6 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற சட்டரிங் கார்பெண்டர்கள், ஸ்டீல் பிக்ஸ்சர்கள், பத்தாம் வகுப்புத் தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற உதவி சட்டரிங் கார்பென்ட்டர்கள், உதவி ஸ்டீல் பிக்ஸ்சர்கள் பெருமளவில் தேவைப்படுகிறார்கள்.
தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் தகுதி, அனுபவத்துக்கு ஏற்ப, ஊதியத்துடன் இலவச விமான டிக்கெட், இருப்பிடம், மருத்துவக் காப்பீடு, மிகை நேர பணி ஊதியம் ஆகியவை வெளிநாட்டு வேலையளிப்போரால் வழங்கப்படும்.
மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள், நீலநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகம், 42, ஆலந்தூர் சாலை, கிண்டி, சென்னை-32.
மேலும் விவரங்களுக்கு 044-22505886, 22502267 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் அல்லதுஜ்ஜ்ஜ்.ர்ம்ஸ்ரீம்ஹய்ல்ர்ஜ்ங்ழ்.ஸ்ரீர்ம் என்ற இணையதளத்திலும் பார்க்கலாம்.
இந்தியாவின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் ராணுவ ஆயுத தொழிற்சாலைகளில் காலியாக உள்ள 1572 டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: மெக்கானிக்கல் - 876
பணி: இன்பர்மேஷன் டெக்னாலஜி - 23
பணி: எலக்ட்ரிக்கல் - 133
பணி: கெமிக்கல் - 296
பணி: சிவில் - 39
பணி: மெட்டலர்ஜி - 46
பணி: கிளாத் டெக்னாலஜி - 32
பணி: லெதர் டெக்னாலஜி - 04
பணி: தொழில்நுட்ப பணி அல்லாதவை (ஸ்டோர்ஸ்) - 41
சம்பளம்: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் 09.08.2014 தேதியின்படி மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200 வழங்கப்படும்.
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் துறையின் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் சம்மந்தப்பட்ட துறையில் மூன்று வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
கெமிக்கல், மெட்டலர்ஜி, கிளாத்திங் டெக்னாலஜி, லெதர் டெக்னாலஜி துறையின் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் சம்பந்தப்பட்ட துறையில் மூன்று வருட டிப்ளமோ அல்லது வேதியியல் துறையில் பி.எஸ்சி. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இன்பர்மேஷன் டெக்னாலஜி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கணினி அறிவியலில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
தொழில்நுட்பம் அல்லாத பணி (ஸ்டோர்ஸ்). மற்றும் தொழில்நுட்பம் அல்லாத பணி (ஸ்டோர்ஸ் தவிர) விண்ணப்பிப்பவர்கள் இன்ஜினியரிங், டெக்னிக்கல், மனிதஇயல், அறிவியல், வணிகவியல், சட்டம் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 09.08.2014 தேதியின்படி அனைத்து பணிகளுக்கும் 27க்குள் இருக்க வேண்டும். மாற்றுத்தினாளிகளுக்கு இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி  அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை 'Principal Director, Recruitment fund ofrb, Ambajhari, Nagpur' என்ற பெயருக்கு டி.டி.யாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற விண்ணப்பதாரரிகளின் சந்தேகங்களுக்கு www.ofb.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.08.2014.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 16.08.2014.
சண்டிகார் அரசு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 75 ஹெல்பர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம்:
01. ஹெல்பர் மெக்கானிக் - 56
02. ஹெல்பர் எலக்ட்ரீசியன் - 05
03. ஹெல்பர் பிளாக்ஸ்மித் - 07
04. ஹெல்பர் கார்பென்டர் - 03
05. ஹெல்பர் வெல்டர் - 02
06. ஹெல்பர் பெயின்டர் - 02
சம்பளம்: மாதம் ரூ.5,910 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.01.2014 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படியும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.400. ஒபிசி பிரிவினருக்கு ரூ.200. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.08.2014.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.chdctu.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.