Tuesday, April 22, 2014

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு புனே ஆயுத தொழிற்சாலையில் வேலை

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு புனே ஆயுத தொழிற்சாலையில் வேலை
மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் உள்ள ராணுவ ஆயுத தொழிற்சாலையில் சிவிலியன் மோட்டார் டிரைவர் மற்றும் பல்நோக்கு பணியாளர் இடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் விவரம்:
1. சிவிலியன் மோட்டார் டிரைவர்: 3 இடங்கள் (பொது).
தகுதி: மெட்ரிகுலேசன் மற்றும் அதற்கு சமமான கல்வித்தகுதி. இலகு மற்றும் கனரக ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதோடு ஆட்டோ மொபைல் பழுது பார்ப்பும் அறிந்திருப்பது அவசியம்.
வயது: 27.4.2014 அன்று 18 முதல் 32க்குள்.
2. பல்நோக்கு பணியாளர்: 13 இடங்கள். (பொது - 7, எஸ்டி - 2, ஒபிசி - 4)
தகுதி: மெட்ரிகுலேசன்.
வயது: 27.4.2014 அன்று 18 முதல் 25க்குள்.
எழுத்துத்தேர்வு, திறனறியும் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்:
ரூ.50. இதை 'General Manager, High Explosives Factory, Khadka, Pune' என்ற பெயருக்கு புனேயில் மாற்றத்தக்க வகையில் டிடி அல்லது போஸ்டல் ஆர்டர் எடுக்க வேண்டும். எஸ்சி., எஸ்டி. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்குhttp://ofbindia.gov.in/units/index.php?unit=hef என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The General Manager,
High Explosives Factory,
Khadki,
PUNE,
MAHARASHTRA.
PIN: 411 003.

No comments:

Post a Comment