Monday, January 29, 2018

தமிழக அரசில் தொழிலாளர் நல ஆணையர் வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு Dinamani 27 Jan. 2018 11:51

தமிழக அரசின் தொழிலாளர் நல ஆணையத்தில் காலியாக உள்ள 10 தொழிலாளர் நல உதவி ஆணையர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியானவர்களிடமிருந்து பிப்ரவரி 11க்குள் ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிக்கை எண்.1/2018
பணி: Assistant Commissioner of Labour
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,00
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். விதவைகள், எஸ்சி, எஸ்டி, பிசி, பிசிஎம், எம்பிசி, டிசி, பிரிவினர்களுக்கு உச்ச வயதுவரம்பு இல்லை.
தகுதி: தொழிலாளர் மேலாண்மையில் முதுகலை பட்டம் அல்லது இளங்கலை பட்டம் பெற்று சமூ சேவை, சமூக அறிவியல், தொழிலாளர் தொடர்பியல் பாடப்பிரிவுகளில் இளங்கலை, டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது தொழிலாளர் சட்டம் மற்றும் நிர்வாகவியல் சட்டத்தில் டிப்ளமோ அல்லது சட்டப்பிரிவில் இளங்கலை பட்டம் தொழிலாளர் நிர்வாகம் பிரிவில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 29.04.2018
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 13.02.2018
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.02.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpsc.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
In the year 1923, the British Government established a Public Service Commission to examine the salary structure of the Indian Civil Service. The Commission was composed of four Englishmen and four Indian with Lord Lee of Fareham serving as its Chairman. The Commission also addressed the rate of Ind...
TNPSC.GOV.IN

No comments:

Post a Comment