Thursday, January 25, 2018

திருச்சி, நெல்லை தேர்வு மையங்கள் ரத்து

ரசாயனவியல் நிபுணர் பதவிக்கான தேர்வில், திருச்சி, திருநெல்வேலி மையங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

அரசு துறைகளில், இளநிலை ஆய்வாளர், இளநிலை ரசாயனவியல் நிபுணர், ரசாயனவியல் நிபுணர், தொல்பொருள் ஆய்வு ரசாயன நிபுணர் பதவிக்கு, பிப்., 17, 18ல், தேர்வு நடத்தப்படுகிறது.இதற்கு, திருச்சி மற்றும் திருநெல்வேலிக்கு உட்பட்ட பகுதியில் குறைந்த எண்ணிக்கையில், விண்ணப்பங்கள் வந்துள்ளன.
எனவே, திருநெல்வேலி மற்றும் திருச்சி மையங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவற்றில் தேர்வு எழுத உள்ளோருக்கு, மதுரை மையங்களில் இடங்கள் வழங்கப்படும். தேர்வர்களுக்கு,www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விரைவில், ஹால் டிக்கெட் பதிவேற்றம் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
In the year 1923, the British Government established a Public Service Commission to examine the salary structure of the Indian Civil Service. The Commission was composed of four Englishmen and four Indian with Lord Lee of Fareham serving as its Chairman. The Commission also addressed the rate of Ind...
TNPSC.GOV.IN

No comments:

Post a Comment