இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி போன்ற 20 அரசுமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏற்பட்டுள்ள பணியிடங்களுக்கான பொது எழுத்துத் தேர்வினை ஐபீபிஎஸ் என்ற நிறுவனம் வருடத்திற்கு இரண்டு முறை நடத்துகிறது.
மத்திய அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள 5134 பணியிடங்களுக்கான அறிவிப்பு எஸ்எஸ்சி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10, +2 முடித்தவர்கள் இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
புதிய கல்விக் கொள்கை அமலானால், பி.எட்., படித்து காத்திருக்கும், 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, கணினி ஆசிரியர்களுக்கு, வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற, எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து, வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களை அழைத்து, பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுத அறிவுறுத்த வேண்டும் என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 32 மாவட்டத்திலும் படித்த லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து,அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர்
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து, வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களை அழைத்து, பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுத அறிவுறுத்த வேண்டும் என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொது சுகாதாரத் துறையில், காலியாக உள்ள, 110 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள், தற்காலிக அடிப்படையில்நிரப்பப்பட உள்ளன. துப்புரவு ஆய்வாளர், டிப்ளமோ படித்தோர் இதில் சேரலாம். 'விண்ணப்பங்களை,www.tnhealth.orgஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, வரும் 23ம் தேதிக்குள், பொது சுகாதார இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.