Thursday, April 2, 2015

பட்டதாரிகளுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் பணி

மத்திய அரசின் சுற்றுப்புறச்சூழல், வனம் மற்றும் பருவநிலை அமைச்சரவையின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள சயின்டிஸ்ட், அசிஸ்டென்ட், லோயர் டிவிசன் கிளார்க், ஜூனியர் பொறியாளர் போன்ற 60 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: சயின்டிஸ்ட்: 'ஈ'
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.8,700. 
வயது வரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பி.இ, பி.டெக் அல்லது எம்.இ, அல்லது எம்.டெக் அல்லது இயற்கை-வேளாண் அறிவியல்களில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். நெட் தேர்வு அல்லது முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பணி: சயின்டிஸ்ட்: 'டி'
காலியிடங்கள்: 02 
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.7,600. 
வயது வரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடத்தில் பி.இ, பி.டெக், அல்லது எம்.இ அல்லது எம்.டெக் அல்லது இயற்கை-வேளாண் அறிவியல்களில் முதுகலை பட்டம். நெட் தேர்வு அல்லது முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பணி: சயின்டிஸ்ட்
காலியிடங்கள்: 08 
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600. சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் முன் அனுபவம்.
வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடத்தில் பி.இ, பி.டெக், அல்லது எம்.இ, அல்லது எம்.டெக், அல்லது இயற்கை-வேளாண் அறிவியல்களில் முதுகலை பட்டம். நெட் தேர்வு அல்லது முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
 
பணி: உதவி சட்ட அதிகாரி
காலியிடங்கள்: 02 
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். 
கல்வித்தகுதி: பி.எல் பட்டத்துடன் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் வழக்கறிஞராக  பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: உதவியாளர்
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் அலுவலக நடைமுறைகள் குறித்து 3 ஆண்டுகளுக்கு குறையாத முன் அனுபவம் மற்றும் கம்ப்யூட்டரில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளுக்கு குறையாமலும் அல்லது இந்தியில் 30 வார்த்தைகளுக்கு குறையாமலும் கம்ப்யூட்டரில் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: ஜூனியர் சயின்டிபிக் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 02 
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: அறிவியல் பாடத்தில் ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு பணியில் அல்லது அதன் தொடர்புடைய பணியில் 4 ஆண்டுகள் முன் அனுபவம். அறிவியல் பாடத்தில் முதுநிலை பட்டம் விரும்பத்தக்கது.
பணி: லோயர் டிவிசன் கிளார்க்
காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
வயது வரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் கம்ப்யூட்டர் டைப்பிங்கில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும் அல்லது இந்தியில் 30 வார்த்தைகளும் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: ஜூனியர் டெக்னீசியன்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
வயது வரமபு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
பணி: ஓட்டுநர்
காலியிடங்கள்: 03 
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
வயது வரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் பணியில் 3 ஆண்டுகள் அனுபவம் மற்றும் மெக்கானிசம் தெரிந்திருப்பது விரும்பத்தக்கது.
பணி: டேட்டா புராசசிங் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 03 
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பிரிவில் பட்டம் அல்லது ஏதாவதொரு பட்டத்துடன் கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: சீனியர் லேபரட்டரி அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 05 
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: அறிவியல் பிரிவில் +2 மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: ஜூனியர் லேபரட்டரி அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 03 
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
கல்வித்தகுதி: அறிவியல் பிரிவில் +2 முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
பணி: சீனியர் டெக்னீசியன்
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
கல்வித்தகுதி: இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், ஆட்டோ மொபைல் போன்ற பொறியியல் பாடங்களில் ஏதாவதொன்றில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: நிதி மற்றும் கணக்கு அதிகாரி
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.7,600.
கல்வித்தகுதி: இந்தியன் தணிக்கை மற்றும் அக்கவுன்ட்ஸ் சர்வீஸ், இந்தியன் பாதுகாப்புத்துறை அக்கவுன்ட்ஸ், இந்தியன் ரயில்வே அக்கவுன்ட்ஸ் சர்வீஸ் அல்லது மத்திய, மாநில அரசின் முக்கிய துறையில் அக்கவுன்ட்ஸ் சர்வீசில் குறைந்தது 12 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: நிர்வாக அதிகாரி
காலியிடங்கள்: 01 
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600.
கல்வித்தகுதி: பட்டப்படிப்புடன் பெர்சனல் மேனேஜ்மென்ட் பாடத்தில் முதுகலை டிப்ளமோ மற்றும் அக்கவுன்ட்ஸ், நிர்வாகம் உள்ளிட்டவற்றில் 7 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: பிரிவு அலுவலர்
காலியிடங்கள்: 03 
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.
கல்வித்தகுதி: மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் பிரிவு அலுவலராக பணியாற்றியிருக்க வேண்டும்.
பணி: தனி செயலாளர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று, ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 120 வார்த்தைகள் எழுதும் திறனும், அதனை நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் விகிதம் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும். மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாவது பணியாற்றியிருக்க வேண்டும்.
பணி: இளநிலை பொறியாளர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மத்திய, மாநில, யூனியன் பிரதேச அலுவலகங்களில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு  இளநிலை பொறியாளராக பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
பணி: இளநிலை பொறியாளர்
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
கல்வித்தகுதி: சிவில் பிரிவில் டிப்ளமோ மற்றும் மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் இளநிலை பெறியாளராக பணியாற்றிய அனுபவம் வேண்டும்.
அனைத்து பணிகளுக்கும் வயது வரம்பு 05.04.2015 தேதியின்படி கணக்கிடப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Administrative Officer (Recruitment),
Central Pollution Control Board,
“Praivesh Bhawan“, East Arjun Nagar,
Shahdara,
DELHI110032.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.04.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.cpcb.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment