Thursday, February 19, 2015

மத்திய அரசின் சர்வே துறையின் கீழ் செயல்பட்டு வரும் சர்வே துறையில் உள்ள காலியாக உள்ள 118 Topo Trainees Type 'A' (T.T.T.'A') பணியிடங்களுக்கு கணிதத்துறை பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Topo Trainees Type 'A' (T.T.T.'A')
காலியிடங்கள்: 118
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900. மேலும் மத்திய அரசுக்கு இணையான சலுகைகள் வழங்கப்படும். பயிற்சிக்குப் பின் பணி நிரந்தரம் செய்யப்படுபவர்களுக்கு ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200 என்ற விகிதத்தில் சம்பளம் வழங்கப்படும்.
பயிற்சி காலம்: 2 வருடங்கள்.
தகுதி: 45 சதவிகித மதிப்பெண்களுடன் பிஎஸ்சி (கணிதம்) பட்டம். எஸ்சி., எஸ்டி., ஒபிசி பிரிவினர் 40 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது.
வயது வரம்பு: 21.02.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும், எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்களும் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, ஸ்டீரியோஸ்கோபிக் ஃபியூஷன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.02.2015.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, பயிற்சி குறித்த விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.surveyof india.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

No comments:

Post a Comment