Saturday, January 2, 2016

வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்கப் படுகின்றன. 

கலெக்டர் நந்தகுமார் கூறியதாவது: 
ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்தோருக்கு ரூ.100, தேர்ச்சிக்கு ரூ.150, பிளஸ் தேர்ச்சிக்கு ரூ.200, பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.300 மாதந்தோறும் வழங்கப்படும். இந்த உதவித்தொகை ஆண்டுகளுக்கு தரப்படும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஆண்டுக்கு மேல் காத்திருப்போராக இருத்தல் வேண்டும். பதிவை தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும். 
ஆதிதிராவிடர்பழங் குடியினர் 45 வயதிற்குள்ஏனையோர் 40 வயதிற்குள்குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். பள்ளிகல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாது. அஞ்சல் வழியில் படிப்போர் விண்ணப்பிக் கலாம். ஏற்கனவே உதவித்தொகை பெறுவோர் வங்கி சேமிப்பு புத்தக நகலுடன் உறுதிமொழி படிவத்தை பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் உதவித்தொகை வழங்கப் படும். 
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு பூர்த்தி அடைந்தோர் விண்ணப்பிக்கலாம். கல்வி சான்றுகள்வேலைவாய்ப்பக அட்டையுடன் நேரில் வந்து விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம். உதவித்தொகை பெறு வோருக்கு பதிவுமூப்பு விபரம் ரத்து செய்யப்பட மாட்டாதுஎன்றார்

No comments:

Post a Comment